உறுமாற்றம் என்ற தலைப்பில் ஒரு கதை..
கிட்டத்தட்ட அந்த கதையில் வரும் மனிதனை நான் நேரில் சந்தித்தேன்!
அவனது பெயர் ரகு!
யாரையும் தரகுறைவாக குறிப்பிட வேண்டும் என்பது என் என்னமல்ல...
ரகுவைப் போல ஒரு மனிதனை நீங்கள் சந்தித்து இருப்பீர்களா என்பது சந்தேகம்தான்!
ஒரு வேலை சந்தித்தும் இருக்கலாம்..
ஆனால் அந்த மனிதரோடு பேசிப் பழகி இருப்பீர்களா என்பது என் அளவில் சந்தேகம்!
ஆனால் நான் பல நாட்கள் பேசி இருக்கிறேன்! சில நாட்கள் நெருங்கிப் பழகியும் இருக்கிறேன்!
விளிம்பு நிலை மனிதன்!
கடவுளால் மனசாட்சியே இல்லாமல் கண்டு கொள்ளாமல் கைவிடப் பட்ட மனிதன்!
ஏன் கடவுளுக்கு இவன் மேல் இவனது வாழ்வின் மேல் இத்தனை அலட்சியம் என்று பல நாட்கள் அவனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் யோசித்து இருக்கிறேன்.
அவ்வாறு அவனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம்...
அவன் பல முறை - பல நாட்கள் சொன்ன அந்த ஒற்றை வரி வார்த்தைகள் என் நினைவுக்கு வரும்!
"நான் ஏன் சாகனும்? நான் வாழ்வேன் பாலா! நான் வாழனும்! நான் எதை எல்லாம் இழந்தேனோ அதையெல்லாம் திரும்ப பெறனும்! இது ஒன்னுதான் எனக்கு முன்னே இருக்கும் ஒரே சவால்! என் சொந்த காரங்க சிலர் நினைக்கிறார்கள் நான் செத்துடுவேன்னு! ஆனால் நான் சாக மாட்டேன்!" என்பான்.
எவ்வளவு துயரமான வார்த்தைகள்?!
அவனது இந்த வார்த்தைகளுக்குப் பின்னே இருக்கும் எதிர்பார்ப்பும் துயரமும் உங்களுக்குப் புரிகிறதா..?
பல நாட்கள் இதே வார்த்தைகளை இதே அர்த்தம் சொல்லும் வார்த்தைகளை வேறு வேறு மாதிரி என் எதிரே பேசி இருக்கிறான்! சில சமயம் குடித்துவிட்டு!
அதெல்லாம் சரி, யார் இந்த ரகு என்கிறீர்களா?
சில மாதங்களுக்கு முன்பு..
என்னோடு ஒரு செக்யூரிடியாக வேலை பார்த்தவன்!
இப்பொழுது நானும் அந்த வேலையில் இல்லை! அவனும் அந்த வேலையில் இல்லை!
நான் வேலைக்கு சேர்ந்த இரண்டு தினங்களுக்குப் பிறகு வந்து வேலையில் சேர்ந்தான்!
மிகவும் பாமரனைப் போலவே இருப்பான்! ஆனால் பட்டதாரி! ஆங்கில மொழியை எழுதவும் படிக்கவும் அவ்வளவு எளிமையாக கையாளுவான்! பேசுவதற்க்கு மட்டுமே தினருவான்!
அவனது ஆங்கில எழுத்து நடையை கண்டு நான் வியந்து இருக்கிறேன்.
ஆனால் அவனது உடல் தோற்றம் ஒன்றும் அவ்வளவு திருத்தமாக இக்காது! இளம் வயதில் விழுந்துவிட்ட தொப்பை, அவனது உடலுக்கு அழகாகவே இருந்தாலும் சற்றுத் தனித்து தெரியும்!
அவன் வேலைக்கு சேர்ந்த ஆரம்ப நாட்களிலேயே என்னோடு பழகுவதில் அதிகம் ஆர்வம் காட்டினான்!
நான் அவனை கவனிக்க ஆரம்பித்தேன்!
கழுத்தை சுற்றி பெரியதாய் ஒரு தழும்பு! முறடுகட்டி கருத்துப் போய் இருக்கும்! தூக்கில் தொங்கியதற்கான அடையாளம் போல்! வலது காது உறுகுலைந்து இரண்டு துண்டுகளை ஒட்டினாற்ப்போல் தையல் போடப் பட்டு இருக்கும்!
சிரித்தான் என்றால்..
எதிர் பல் வரிசையில் இரண்டு பற்க்கள் ஓர் ஒழுங்கில்லாமல் உடைந்து, அதனால் பழுப்பேறிய கலரில் இருக்கும்!
சட்டென்று அவனைப் பார்ப்பவர்கள் அவனைப் பற்றி ஏதேதோ நினைப்பார்கள்!
இதை விட பெரும் துயரம்..
அவனது வலது கை..!
மேல் நோக்கி எழவே எழாது..!
குறைந்த பட்சம் உட்கார்ந்த நிலையில் கூட அவனது வலது கை அவனது வாய்வரைக்கும் கூட எழாது!
80% துவண்டு விட்ட ஓர் நிலை!
எங்கேனும் அவனை நீங்கள் சந்தித்தீர்கள் என்றால் சட்டென்று அவனது உடல் குறைகளை இனம் கானவே முடியாது!
சில சமயம் நன்கு தேர்ந்தவனாய் நாகரிமாய் நீட்டாகத்தான் உடை உடுத்துவான்!
புதியவர்களிடம் மட்டுமே நாகரிகமான பேசக் கூடியவன்!
ரகுவைப் பற்றி யோசிக்கும் பொழுதெல்லாம் இந்தப் பெண்களைப் பற்றியும் அவர்களது குணங்கள் பற்றியும் ரொம்பவே அதிகமாக யோசிப்பேன்!
அடிப் படையில் ஆணின் இயல்பும் பெண்ணின் இயல்பும் ஒன்றுதான் என்றுத் தோன்றும்!
அடிப்படை மனித வாழ்க்கை குறித்தும்! உறவு முறை சிக்கல்கள் குறித்தும் அதிக நேரம் யோசிப்பேன்!
மனித மனம்தான் எத்தனை விசித்திரமானது..
நாம் வாழும் வாழ்க்கைதான் எத்தனை போலியானது...
மாமான் மச்சான்
அண்ணன் தம்பி
அக்கா தங்கை..
மகன் மகள்
அவ்வளவு ஏன்..?
அப்பா அம்மா
என்ற உறவுகள் கூட போலியானதுதான்..!
நீங்கள் உங்களது சுயத்தை இழந்தால்...
ஆம்
நீங்கள் உங்களது தனித்துவத்தை இழந்தால்...
மற்றவர்களுக்கு உங்கள் மேல் இருக்கும் பிரமிப்பை நீங்கள் இழக்க நேர்ந்தால்...
அதோடு முடிந்தது உங்கள் வாழ்க்கை!
அதன் பிறகு நீங்கள் இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான்!
நினைத்துப் பாருங்கள்..!
ஒரு விபத்து..! ஒரு மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடுமா என்ன?
ஆனால் ரகுவின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்டது!
வாழ்க்கையில் எது வேண்டுமனாலும் நம்மை விட்டுப் பிரிந்து போகலாம்..
ஆனால் வாழ்க்கைத் துணையும் அவர்களால் நாம் பெற்ற பரிசாய் வந்த குழந்தைகளும் நம்மை விட்டுப் பிரிந்து போகவே கூடாது..!
ரகு வாழ்க்கையைப் பற்றி நான் அறிந்த வரையிலும் அதனால் நான் கற்றப் பாடத்தைப் பற்றியும்
உங்களுடன் முழுதாகப் பகிர்ந்து கொள்வதற்க்கு முன்பு..
சிறிய கதை ஒன்றை சொல்கிறேன் கவனமாக கேளுங்கள்.
உலகப் புகழ் பெற்ற கதை இது!
உலகம் முழுக்க பல்வேறு மீடியாக்கள் மூலம் மக்கள் மனம் கவர்ந்த கதை இது!
படிப்போர் - சொல்லக் கேட்போர் - காட்சிகளாக பார்ப்போர், என அத்தனை மனிதர்களின் அடி மனதையே அதிரச் செய்யும் கதை இது...!
ஒரு குடும்பம்!
அப்பா அம்மா
அண்ணன் தங்கை
இவர்கள் நான்கு பேர் மட்டுமே வாழும் சின்ன குடும்பம்!
தங்கை படித்துக் கொண்டு இருக்க, வயதான அப்பா அம்மாவை வீட்டில் விட்டு விட்டு அவன் ஒருவன்தான் வேலைக்குப் போகிறான்!
அவன் ஒருவன்தான் அந்த குடும்பத்தின் ஆணி வேர்! வருமானம் ஈட்டும் நபர்!
ஒரு நாள், விடியற்க் காலையில் அந்த மனிதன் தன் படுக்கை அறையில் ஒரு கரப்பான் பூச்சியாக உருவம் மாரிக் கிடக்கிறான்!
நேற்று ஓவர் டைம் வேலை பார்த்துவிட்டு வந்ததால் அசந்து தூங்குகிறான் என்று அவனது பெற்றோர்கள் நினைக்கிறார்கள்!
நேரம் போய்கிட்டே இருக்கிறது..
அவன் எழுந்திரிக்கவும் இல்லை..
கதவை திறந்து கொண்டு வெளியே வரவும் இல்லை!
அவன் வேலை செய்யும் இடத்தில் இருந்து போன் மேல் போன் வருகிறது..!
தங்கைதான் எடுத்துப் பேசுகிறாள்!
"இன்னும் ஏன் வரவில்லை? இன்று வேலை அதிகம். சீக்கிறமாக அல்லவா வரச் சொல்லி இருந்தோம்!" என்று போனில் அதிகாரி சத்தம் போடுகிறார்!
கல்லூரிக்கு செல்லும் அவனது தங்கைதான் அவனது ரூமுக்குச் சென்று அவசர குரலில் அவனை எழுப்புகிறாள்!
அவன் எழுந்து உட்காரக் கூட முடியாமல் வினோதமான ஓசையுடன் கட்டிலில் இருந்து உருண்டு கீழே வீழ்கிறான்!
தன்னுடைய அண்ணன் அறையில் ஏதோ ஓர் வினோத ஜந்துவைப் பார்த்த அதிர்ச்சியில் அவள் பெரும் அளறலுடன் பயந்து வெளியே ஓடுகிறாள்!
அவனது அப்பா அம்மா வந்து பார்க்கிறார்கள்.
தன் மகன்தான் இப்படி ஓர் கரப்பான் பூச்சியைப் போல மாரிவிட்டான் என்பதை சற்று தாமதமாகவே உணர்ந்து கொள்கிறார்கள்!
தனக்கு ஏன் இப்படி ஆனது என்று அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை! தனக்கு என்ன நடந்தது என்று தன் அப்பா அம்மாவிடம் கேட்க நினைக்கிறான். அவனது குரலை கேட்க அவனாலையே சகித்துக் கொள்ள முடியவில்லை! அது மட்டுமல்லாமல் அவன் என்ன பேசுகிறான் என்று யாருக்குமே புரியவில்லை!
நாட்கள் செல்கிறது அவனை அந்த அறையிலேயே பூட்டி வைத்திருக்கிறார்கள்! அவன் மீண்டும் மனிதனாக மாரவே இல்லை!
வருமானத்திற்க்கும் வழியே இல்லை!
கதவை திறந்து கொண்டு உள்ளேப் போய் அவனை பார்க்கவே பிரியப் படாதவர்களாய் வாழ ஆரம்பிக்கிறார்கள்!
அவனது தங்கைதான் இப்பொழுது வேலைக்குப் போகிறாள்!
அவர்களுடைய இயல்பு வாழ்க்கை திரும்புகிறது!
சில மாதங்களில் வாசதியான வாழ்க்கையாகவும் மாறுகிறது!
அவனை எப்பொழுதாவது வந்து கவனித்துக் கொள்ள ஓர் வேலைக்காரியை ஏற்ப்பாடு செய்கிறார்கள்!
அந்த கரப்பான் பூச்சிக்கு பசி வரும் போதெல்லாம் கத்தும்! அதனுடைய சத்தம் அவர்களுக்கு சொல்ல முடியாத அளவில் எரிச்சலை கொண்டுவரும்!
என்றேனும் மீண்டும் குணமாகி பழைய நிலைக்குத் திரும்பிவிடுவான் என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் இந்த நாள் வரைக்கும்..
நேரம் தவறாமல் மூன்று வேலை உணவு தந்தவர்கள்..
நாளாக நாளாக மீதம்மான சோற்றையும் வீனான உணவையும் மட்டுமே திட்டிக் கொண்டே கொடுப்பார்கள்!
அவன் நம் மகன்..
நம் அண்ணன்..
என்ற உணர்வே சுத்தமாய் அற்றுப் போய்..
அது ஒரு கரபான்பூச்சி என்றே நினைக்க ஆரம்பிக்கிறார்கள்.?!!
ஒரு காலத்தில் நமக்காக எவ்வளவு கடுமையாக உழைத்தவன் என்ற உணர்வுகள் கூட அவர்களிடம் கொஞ்சமும் இல்லாமலேயே போய் விடுகிறது!
நன்றி, கருனை, விசுவாசம் இவை எல்லாமே ஒரு நேரத்தில் நம்மை விட்டுப் போய்விடும் குணங்கள்தான் என்ற ஆழ் மன உளவியலை மிக அற்ப்புதமாக வெளிப் படுத்தும் கதை இது!
தினம் திட்டியே கொட்டுப் போன உணவை கொடுக்கும் அப்பா அம்மாவைப் பார்த்தும்
தன் சத்ததத்தை புரிந்து கொள்ளவே முயற்ச்சிக்காமல் தினம் தன் குரல் கேட்கும் போதெல்லாம் திட்டிதீர்க்கும் தங்கையைப் பார்த்தும்..
அவன் சொல்ல முடியாத துக்கத்துடன் தன் அறையிலேயே சுறுண்டும் அடைந்தும் கிடக்கிறான்!
அவன் வாழ்க்கை ரொம்பவே பரிதாபமாக மாரிவிடுகிறது..!
எவ்வளவு வலியிலும் பசியிலும் கத்தாமல் இருக்கவும்..
இரண்டு ஒரு நாட்கள் வரை பட்டினியோடு வாழவும்.. பழக்கியிருந்த அந்த கரப்பான் பூச்சி...
ஓர் நாள்..
அவர்கள் மூவரும் சுற்றுலா செல்ல தயாராகிக் கொண்டு இருக்கும் போது...
இறந்தே போகிறது!
வேலைக்காரி வந்து தகவல் சொல்கிறாள்!
"சரி சரி. நாங்க வெளியே கிலம்பிட்டோம்! நாங்கப் போன பிறகு நீயே நம்ம தோட்டத்துல அதை புதச்சுடு" என்று கூறிவிட்டு அவர்கள் கிளம்பிப் டூர் போவதுடன் இந்த கதை முடிகிறது!
இந்த ஒரு கதையை நீங்கள் முழுதாக படித்தீர்கள் என்றால் ஓர் ஆயிரம் அனுபவங்களைப் பெற்றவர் போல உணர்வீர்கள்!
ஒரு லட்சம் சிந்தனைகளைப் பெருவீர்கள்!
இந்த கதையில் ஒரு மனிதன் கரப்பான் பூச்சியாக மாறிவிட்டான் என்பது ஒரு குறியீடுதான்.
அது எதன் குறியிடு என்று நீங்களே கொஞ்சம் சுயமாக யோசித்துப் பாருங்கள்!
அதற்கெல்லாம் நேரமே இல்லை என்று நழுவுகிறீர்களா..?
ஒரு நிமிஷம்..
நீங்கள் ஆணோ பெண்ணோ...
இதை மட்டுமே கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்
நீங்கள் ஒரு ஆறு மாத காலம்..
சரி வேண்டாம்
விட்டுடுவோம்...
அடுத்த பதிவில் இந்த ரகுவைப் பற்றியும் சிதைந்து போன அவனது வாழ்வைப் பற்றியும் பார்ப்போம்!
இந்த மனித வாழ்வில் எல்லாமே சுய நலம்தான்! என்ற உண்மை ரகுவின் வாழ்க்கையை நன்கு கவனித்தாலே புரிந்து கொள்ள முடியும்!
உங்கள் பெற்றோர்கள் உங்களை ஆளாக்கியதும்..
நீங்கள் உங்கள் பிள்ளைகளை கவனித்துக் கொள்வதும்..
அவ்வளவு ஏன்..?
நீங்கள் சிரிப்பதும்
நட்பு பாராட்டுவதும்
ஒருவரிடம் அதிகப் படியான காதலை வெளிப் படுத்துவதும்...
இன்னும் நம் செயல்கள் அனைத்தையும் ஊடுருவி தோல் உரித்துப் பார்த்தீர்கள் என்றால்...
எல்லாமே சுய நலத்தின் வெளிப்பாடாக மட்டுமே இறுக்கிறது என்ற உண்மைப் புரியும்!
எதையும் மேலோட்டமாக மட்டுமே பார்த்துப் பழகிவிட்ட நாம் ஒன்றுநம்மை பாராட்டிக் கொள்கிறோம்..
அல்லது எவனையாவது பாராட்டிப் பேசுகிறோம்!
நான் நல்வனாக வாழ்வதும்
அவன் வள்ளலாக வாழ்வதும்
நீங்கள் கருமியாக இருப்பதும்
யாரோ ஒருவர் கருனையோடு நடந்து கொள்வதும்..
இப்படி எல்லா பெயர்களுக்கும் உணர்வுகளுக்கும் உள்ளே மூலமாய்
சுயமாய் இருப்பது சுயம்+நலம் என்ற ஓர் அடிப்படை உயிரியல் பண்புதானேத் தவிர வேறு ஒன்றுமே இல்லை!
இந்தப் பதிவை படித்துவிட்டு
நீங்கள் என்னை பாராட்டுவதும்..
அல்லது
என்னை கடுப்புடன் திட்டுவதும்..
இவை இரண்டுமே இல்லாமல்
நைசாக நழுவிக் கொள்வதும்...
என எல்லாமே சுய நலம்தான்!
ஹா..ஹா..ஹா..ஹா..!
நிஜத்தை உணர்வதும் அதை புரிந்து கொள்வதும்..
அதைவட அந்த நிஜத்தை ஏற்றுக் கொள்வதும் ரொம்பவே சிரமம் அல்லவா?
எப்பொழுதும் உண்மை சுடும்!