செவ்வாய், 6 அக்டோபர், 2015

சிறு தொழில்

உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்!

உழைப்பு இரண்டுவகைப் படுகிறது!

1 ] உடல் உழைப்பு..!

2 ] மூலை உழைப்பு..!

நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?

உங்கள் உழைப்பு எந்த வகையை சேர்ந்தது?!

உங்கள் உழைப்பு உடல் உழைப்பு என்றால்...

ஐயோ பாவம் நீங்கள்!

உங்கள் வாழ்க்கை எப்பொழுதும் பண நெருக்கடியில்தான் இருக்கும்!

எவ்வளவு சம்பாதித்தாலும் உங்கள் வாழ்க்கையில் அத்தியாவசிய தேவைகளில் குறை இருந்து கொண்டேதான் இருக்கும்!

‪#‎நீங்கள்‬ யாருக்காக உழைக்கிறீர்கள்?

1 ] அரசுக்கு நிர்வாகத்திற்க்கு...

2 ] தனியார் நிறுவணத்திற்க்கு...

இவை இரண்டுமே உங்கள் உழைப்பை சுரண்டி திண்று உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

நீங்கள் எவ்வாறு உழைக்கிறீர்கள்?

1 ] மாத சம்பளத்திற்க்கு…

2 ] வார சம்பளத்திற்க்கு…

3 ] தின கூலிக்கு…

உங்கள் உழைப்பு வார சம்பலத்திற்க்கும் தின கூலிக்காவும் மட்டுமே இருக்குமே எனில்...

நாளைய பணக்காரர்கள் நீங்கள்தான்!

ஆம் அந்த உலக பணக்காரர்கள் பட்டியலில் உங்கள் பெயர் கடைசியாக இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள்!

புரியும் படியாக சொல்கிறேன் கவனமாக கேளுங்கள்!

மாத சம்பளம் வாழ்க்கை என்பது பாதுகாப்பனது போல தோன்றினாலும் அது ஒரு கிணற்று தவளை!

நீங்கள் எவ்வளவு முயன்றாலும் வசதியான வாழ்க்கையை உங்களால் அமைத்துக் கொள்ளவே முடியாது!

நீங்கள் மாதம் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?!

குறைந்தது 15,000 ?

அதிக பட்சம் 60,000 ?

நீங்கள் உழைக்கும் காலம் எவ்வளவு?

16 வருடங்கள்...?!

அல்லது 25 வருடங்கள்...?!

செலவுகள் போக மாதம் உங்கள் சேமிப்பு எவ்வளவு இருக்கும்..?

தோராயமாக 20,000 என்று வைத்துக் கொள்வோமா..?

இந்த 20,000 சேமிப்புத் தொகை 25 ஆண்டு காலத்தில் எவ்வளவு சேர்ந்து இருக்கும்..?!

ஒரு வருடத்திற்க்கு 2,40,000

சுமார் 25 வருடங்களில் நீங்கள் சேர்த்து இருக்கும் தொகை...

60,00,000

அவ்வளவுதான்..!

வாயை கட்டி வயித்தை கட்டி நீங்கள் உங்கள் வாழ்நாளில் சேர்த்து இருக்கும் தொகை இதுதான்!

அதன் பிறகு நீங்கள் செய்த அதே அடிமை வேலையை உங்கள் பிள்ளைக்கும் வாங்கி கொடுத்து பெருமை பட்டுக் கொள்வீர்கள்!

அதிக பட்ச சம்பளம்...!
அதிகபட்ச சேமிப்பிற்கே இந்த நிலை என்றால்...

இந்த சேமிப்பு தொகையை மட்டுமே சம்பளமாகப் பெரும் சில மனிதர்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பது உண்மைதான்...

ஆனாலும் எல்லோர்க்கும் எட்டும் ஒரு கனியை பரிக்க முயலாமல் ஏன் அழுகிய கனியை பொருக்கித் திண்று வாழ வேண்டும்..?

ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று ஏன் ஒதுங்கிப் போக வேண்டும்..?

நீங்கள் முயன்றால்...

ஆம் முயன்றால்..

நீங்களும் உலக கோடிஸ்வரர்கள் பட்டியலில் உங்களுக்கான இடத்தை பிடிக்க முடியும்!

ம்ம் கேக்க நன்றாகத்தான் இருக்கிறது...

ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா...?

என்று ஒரு போதும் மலைக்காதீர்கள்!

முயன்றால் முடியாதது என்று இந்த உலகத்தில் எதுவுமே இல்லை!

அதாவது எதிர்காலத்தில்...!
(கடந்த காலம் ஒரு நாளும் திரும்பாது)

வரலாற்றைப் போல ஒரு அற்புதமான வழிகாட்டியை நாம் பார்க்கவே முடியாது!

வரலாற்றை கொஞ்சம் கவனமாகவும்- நம்பிக்கையோடு உற்று நோக்குங்கள்!

ஒரு விஷயம் தெளிவாக புரியும்...!

1 ] எந்த உலக பணக்காரனும் மாச சம்பளத்திற்க்கு வேலை செய்தே இருக்க மாட்டான்!

2 ] தன் உழைப்பை ஒரு நாளும் அடுத்த நிர்வாகத்தின் கீழ் வழங்கியே இருக்க மாட்டான்..!

இவை இரண்டும்தான் நீங்கள் கோடிஸ்வரன் ஆக முதல்தகுதி!

உங்களை நீங்கள் திருத்திக் கொண்டு இந்த இரண்டு தகுதியும் உங்களிடம் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்!

அதற்க்கு முதல் படியாக உங்கள் மாச சம்பள வேலையை உதரித் தள்ளுங்கள்!

நீங்களே உங்களுக்கு முதலாளி என்ற இரண்டாவது படியில் கால் வைக்க தயாராகுங்கள்..?!

ஆம் உங்களுக்காக மட்டுமே கடுமையாக சிறிது காலம் மட்டும் உழைக்க முடிவு எடுங்கள்...

பிறகு உங்கள் வளர்ச்சியை எவனாளும் தடுக்கவே முடியாது!

வாழ்வது ஒரு முறைதான்...
ஏன் பக்கித் தனமாகவும்...

கையாலாகதத் தனமாகவும் வாழ வேண்டும்...?

வாருங்கள் பணம் பண்ணும் விளையாட்டை விளையாடுவோம்!

‪#‎உங்கள்‬ கவனத்திற்க்கு...

சில உலக பணக்காரர்களின் வாழ்க்கை குறிப்புகள்!

இதை பற்றி முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தாலும்..

மீண்டும் உங்களின் பார்வைக்கு..

‪#‎Sony‬…
மார்கெட் வீதியில் பழைய இரும்பு பொருட்களை கொட்டி வைத்துக் கொண்டு விற்க ஆரம்பித்ததில் தொடங்கியது இவரது வாழ்க்கை!

‪#‎MRF‬ டயர்ஸ்
ஊர் ஊராக சென்று திருவிழாக்களில் பலுன் விற்பதில் தொடங்குகிறது இந் நிறுவன முதலாளியின் கதை!

‪#‎Nirma‬
வறுமையை சமாளிக்க முடியாமல் வேலையை விட்டு விலகி வீட்டில் சோப்புத் தூள் தயாரிக்க துவங்கி உள்ளூர் கடைகளுக்கு கொடுக்கத் துவங்கியதில் இருந்து ஆரம்பிக்கிறது இந்த நிறுவனத்தின் கதை!

‪#‎Pears‬ Soap
தனது முடி வெட்டும் கடையில் சேவிங் சோப் தயாரிக்க முயன்றதில் இருந்து ஆரம்பம் ஆகிறது இன் நிறுவணத்தின் வெற்றிக் கதை!

தமிழக வெற்றி கதைகளில் சில!

சொந்தமாக ஒரு பஸ் கூட இல்லாமல்... 'சிவக்குமார் ட்ராவல்' என்ற ஒரு பெயர் பலகையை மட்டும் வைத்துக் கொண்டு ஆரம்பிக்கப் பட்டதுதான்..
‪#‎KPN‬ ட்ராவல்ஸ்! இன்று இந்தியா முழுக்க 750 ஏர்பஸ்களும் 250 க்கு மேல் பார்சல் லாரிகளும் இந் நிறுவனத்திற்க்கு சொந்தமான சொத்து!

வெறும் பத்தாயிரம் ரூபாய் முதலீட்டீல் சிறிய மொபைல் கடையாக திறந்து வெற்றியை நோக்கி உழைத்ததின் விளைவுதான் ‪#‎Univercell‬ Mobile இன்று தமிழகம் முழ்வதும் சந்து பொந்துகளில் எல்லாம் பரவி இருக்கிறது!

சாதாரனமான கேபில் டிவி ஆப்ரெட்டராக வாழ்க்கையை தொடங்கியவர் தான் ‪#‎Raj_TV‬ அதிபர்!

இன்னும் எவ்வளவோ மனிதர்களின் வாழ்க்கையை உதாரணமாக சொல்லிக் கொண்டே போகலாம்..!

'ஜெயித்தவன் ஏதாவது ஒரு கதையை மிகை படுத்தி சொல்லுவான்' இதையெல்லாம் நாங்கள் நம்ப தயாராக இல்லை. என்பவர்கள்...
கவணத்திற்க்கு...

ஏன் நீங்கள் ஜெய்த்துவிட்டு அந்த உண்மையை சொல்லக் கூடாது?!

இந்த பதிவு பற்றி உங்கள் கருத்து என்ன?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக