கதை ஒன்று அதிகப் பட்சமாக என்ன செய்யும்?
விடை ; இந்த பதிவை முழுதாய் படித்து முடிக்கும் போழுது உங்களுக்குப் புரியும்!
சரியாய் இரண்டு தினங்களுக்கு முன்பு
காலை நேரத்தில்
ஒரு சாலை விபத்து..!
என் அப்பா அம்மா இருவர்க்கும் தலையில் காயம்!
எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தோம். பயப்படும் படி ஒன்றும் இல்லை என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.
யாவும் நன்று ! என்று சொல்வது போல, கடந்த இரண்டு நாட்கள் நிறைய படிப்பினைகள் எனக்கு!
முதல் நாள் முழுவதும் எனது பெற்றோர் உடன் மருத்துவ மனையில் நேரம் கழிந்தது!
நேற்றைய நாள் முழுவதும் போலீஸ் நிலையத்தில் நேரம் கடந்தது!
எனது பெற்றோரை அழைத்துக் கொண்டு நேற்றுய மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
ஒரு பெரும் பணபலம் படைத்தவனும்...
சிறு அறிவுதிறன் மிக்கவனும்...
நேற்று நேர்க்கு நேர் சந்தித்துக் கொண்ட ஓர் நிகழ்வு.!
'ஒரு விபத்தில், அதன் வழக்கில் இவ்வளவு அரசியலும் , இவ்வளவு சூழ்ச்சிகளும் நிறைந்திருக்குமா.? ' என்று பல ஆச்சர்ய அனுபவங்களை நான் பெற்றுக் கொண்ட நாள், நேற்றய நாள்!
இந்த அனுபவ பாடத்தையும், அதனால் ஏற்ப்பட்ட மன உளச்சல்களையும் , நான் என்றும் மறக்கக் கூடாது எனவும் எப்பவும் நினைவு கூற வேண்டும் என்றும் இந்தப் பதிவு இங்கே பதியப்படுகிறது!
பணம் என்ன செய்யும்..?
ஒருவன் பெற்ற அறிவு என்ன செய்யும் ?
என்று , இனிவரும் காலத்தில் இந்த சமுதாயம் நன்கு தெரிந்து கொள்ளட்டும்!
அதற்க்காகவே "அதை" அழுத்தமாக இந்த நாளில் சொல்ல விரும்பியதின் விளைவாகவே இந்த பதிவு!
ரத்தம்!
ஒருவர் நம் ஆரோக்கியத்தை சிதைத்து...
நம் அன்றாட பணிகளை சிதைத்து..
எங்கோ உறவுகள் அற்ற ஒரு கானகத்தில் நம்மை ரத்தம் சிந்த வைக்கும் ஓர் நிகழ்வு...
விபத்து!
விபத்து என்பது எதிர்பாராத ஒரு நிகழ்வாக இருந்தாலும்...
பாதிக்கப் பட்டவரின் வலியும் வேதனையும்...
அவர் சிந்திய ரத்தப் பெருக்கும்!
காற்றோடு போய்விடுமா என்ன..?
யாவருக்கும் பொதுவான நமது "மனித நேயம்" எங்கே போயிற்று?
சட்டத்தின் பின்னால் போய் ஒளிந்து கொண்டது என்று சொன்னால், அது வேடிக்கை அல்லவா..?
ஒரு விபத்தை "ஒன்றுமில்லை" என்று சொல்லவும்,
இது ஒரு சாதாரனமான நிகழ்வுதான் என்று சொல்லவும்...
அடேங்கப்பா எத்தனை எத்தனை மனிதர்கள் செயல் படுகிறார்கள்..???!!
தனி ஒருவனால் இத்தனை மனிதர்களை, அவர்கள் தொழில் சார்ந்தே இயக்க முடியுமா..?
அதுவும் மனித இயல்புக்கு எதிராக..!
நினைத்துப் பார்க்கும் போதே...
தலை சுற்றி மூச்சு முட்டியது!
எந்த மாதிரியான சமுகத்தில்...
எந்தமாதிரியான சட்டத்தின் பிடியில் வாழ்கிறோம் என்று ரொம்பவே யோசித்து முழு பிதுங்கியது நாளாகவே அமைந்தது!
யாவும் நலம்! என என்னை நானே தேற்றியும் கொண்டேன்.
ஓர் அளவுக்கு உண்மையை உணரும் வல்லமை பெற்ற என் நிலையே இப்படி?!' என எண்ணும் போது...
பாமர மக்களின் நிலை?
இனி விபத்தின் கண்ணோட்டம் மாற்றம் பெருவதைத் தவிற வேறு வழியே இல்லை!
அதன் மாற்றத்திற்க்கு ஒரு சில தனி மனிதர்களின் வாழ்க்கையோடு விளையாடுவதைத் தவிற எனக்கும் வேறு திட்டம் ஒன்று இப்பொழுதைக்கு என்வசம் இல்லை!
பணமும் - அறிவும்
மோதி விளையாடும் புதியதோர் கதையை மிக விரைவில் இந்த சமுகம் மொத்தமும் அறிந்து கொள்ளட்டும்!
என் தந்தை சிந்திய ஒவ்வொரு ரத்தத்த துளிகளுக்கும் ஒரு மகனாக இருந்து நான் செலுத்தும் கானிக்கை இந்த மிஷன்!
இதன் தலைப்பு, சுபம்!
என் அறிவு...
எனது பலம்...
எனது தனித்தன்மை...
என் எழுத்து...
புதிதாய் கதை ஒன்றை சொல்லும்..!
அந்த கதையே எனது எதிராளியின் வாழ்க்கை எனவும், வரலாறு எனவும் இந்த சமுகம் முழுதாய் நம்பும் நாள் வெகு தொலைவில் இல்லை!
என் எதிரி நாண்டுகிட்டு "அதைச்" செய்வதைத் தவிர வேறுவழியும் இருக்கப் போவது இல்லை!
ஹா..ஹா..ஹா..ஹா..!
அவன் பலம், பணம் என்றால்...
என் பலம் அறிவு..!
கத்தி இல்லை - ரத்தமும் இல்லை - வன்முறையும் இல்லை ! வழக்கும் இல்லை!
ஆனால் அது நிகழும்!