கடந்த பதிவில், ஒரு சம்பவத்தை எப்படி கதையாக மாற்றுகிறார்கள் என்பதை விளக்க மூன்று உதாரணங்கள் தருவதாய் சொல்லி இருந்தேன். அதில் ஒரு சம்பவமாய் ஓ.ஹென்றி யின் சிறுகதை யை பார்த்தோம். மேலும் இந்த கதையைப் பற்றி பார்ப்பதற்கு முன், மற்ற இரண்டு கதைகளுக்கான சம்பவங்களையும் பார்த்துவிடுவோம்!
சம்பவம் 2 (கதை)
ஒரு குக்கிராமம்! அங்கே வாழும் ஆதரவற்ற முதிய தம்பதியர்!
ஆடு வளர்ப்பு மூலம் அவர்களுடை வாழ்வாதாரம் சிக்கல் இன்றி போய்க்கொண்டிருக்கிறது! முன்புபோல் இப்பொழுதெல்லாம் பெரியவரால் ரொம்ப தூரம் போய் ஆடு மேய்க்க முடிவதில்லை! ரோம்பவே வயதாகி விட்டது! ஊருக்கு அருகிலேயே கூட, இப்பொழுதெல்லாம் ஆடு மேய்ப்பது ரொம்பவே சிரமமாக இருக்கிறது.
இருப்புக்கு இரண்டு குட்டிகள் போக மற்ற எல்லாவற்றையும் விற்றுவிட்டால் வேலைச் சுமை குறையும் என்று நினைக்கிறார். நல்ல வியாபாரி கிடைக்க வேண்டும்!
ஒரு நாள், வழக்கம் போல் கிராமத்திற்கு வெளியே ஒரு வரண்ட மேய்ச்சல் நிலப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்! பசுமையான புற்களை விட வறண்டு காய்ந்த புற்கல்தான் இங்கே அதிகம்! ஆனாலும் இந்த இடம் பெரியவர்க்கு மிகவும் பிடித்த இடம்!
கம்பீரமான ஐயனாரப்பன் சிலையின் கீழ் இருக்கும் மேடையில்
உட்கார்ந்து கொண்டு, சற்று தூரத்தில் தெரியும் சாலையை வேடிக்கைப் பார்ப்பது என்றால் யாருக்குத்தான் பிடிக்காது?
கிராமத்து சாலையில் எப்பொழ்தாவதுதான் வாகனங்கள் வரும்! அதை பார்கிற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது!
அன்று அப்படித்தான் ஒரு வாகனம் வந்தது. சற்று பெரிய வாகனம். அதுபோல் ஒரு வாகனத்தை பெரியவர் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை! பெரியவர் சற்று உற்சாகத்துடன் எழுந்து உட்கார்ந்தார். சாலையில் போய்க்கொண்டு இருந்த வாகனம் சட்டென்று திரும்பி, சாலையை விட்டு விலகி பெரியவரை நோக்கி மேய்ச்சல் நிலத்திற்குள் வேகமாக வந்தது! பெரியவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை!
அந்த வாகனம் வந்து, பெரியவர் அருகே நின்றது. வாகனத்தில் இருந்து இரண்டு வெள்ளைகாரர்கள் இறங்கினார்கள். ஆம் வெள்ளைகாரர்கள்!
பெரியவர் இதற்கு முன்பு இவ்வளவு நெறுக்கத்தில் வெள்ளையர்களைப் பார்த்ததே இல்லை!
அவர்கள் ஆங்கிலத்தில் ஏதோ கேட்டார்கள். பெரியவர்க்கு ஒன்றும் புரியவில்லை!
பெரியவர் பயந்தபடி தன் தாய் மொழியில் ஏதோ சொன்னார், அது அந்த வெள்ளையர்களுக்கு புரியவில்லை!
இந்த குழப்பமான உறையாடல் சிறிது நேரம் நீடிக்கிறது. பெரியவர்க்கு ஒன்றும் புரியவில்லை, விட்டால் போதும் என நினைக்கிறார். வெள்ளையர்கள் சட்டென்று ஒரு பெரும் தொகைக்கு மதிப்புடைய ரூபாய் தாள்களை எடுத்து பெரியவர் கையில் தினிக்கிறார்கள். பெரியவர் இவ்வளவு பணத்தை மொத்தமாய் பார்த்ததே இல்லை!
பெரியவர்க்கு, இப்பொழுது ஏதோ புரிகிறது. இவ்வளவு நேரம் இந்த வெள்ளையர்கள் பணத்தைப் பற்றிதான் ஏதோ பேசி இருக்கிறார்கள். பெரியவர் சந்தோஷத்துடன், சிரித்தபடி ஏதோ சொல்ல, வெள்ளைகாரர்கள் ஏதோ புரிந்தார்ப்போல் தலையை ஆட்டி பதிலுக்கு சிரிக்கிறார்கள்.
இவ்வளவு பணத்தை தன் மனைவியிடம் கொடுத்தால் அவள் ரொம்பவே சந்தோஷப்படுவாள் என நினைத்துக் கொண்டு, ஆடுகளை அங்கேயே விட்டு விட்டு, வெள்ளையர்களிடம் சொல்லிக்கொண்டு , முதலில் பெரியவர் அங்கிருந்து கிளம்பி தன் வீட்டுக்குப் போகிறார்.
இதுதான் கதை! இதில் இருக்கும் சம்பவம் என்ன என்று உங்களுக்குப் புரிகிறதா?
இந்த சம்பவத்தை வைத்து, உலகப் புகழ் பெற்ற இந்திய எழுத்தாளர் ஆர்.கே நாராயணன் அவர்கள் எழுதிய ஒரு சிறுகதை மிக சுவாரஷ்யமா இருக்கும். இந்த கதையை நீங்கள் படித்து இருப்பிர்கள் என நினைக்கிறேன். மேலும் இந்த கதையைப் பற்றி நாம் விரிவாக பேசும்முன்...
மூன்றாவது சம்பவம் +கதையை பார்த்துடுவோம்!
தமிழ் இலக்கியம் கடலென பரந்து விரிந்து கிடக்கிறது. அதில் அதிகம் அரியப்படாத ஒரு எழுத்தாளர், தன்னுடை கதையில் கையான்ட ஒரு சாதாரணமான சம்பவம் இது!
ஒரு டெலிபோன் பூத்! அங்கே வேலை செய்யும் ஒரு பெண். அந்த பெண்ணுக்கு, தினமும் நேரம் தவராமல் போன் செய்ய வரும் ஒரு இளைஞன் மேல் ஒரு வித இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது. முன்பெல்லாம் எப்பொழுதாவதுதான் அவன் நினைவு வரும்.!
ஆனால் இன்று?!
காலையில் இருந்தே அவன் நினைவு. அதுவும் அதிகமாகவே அவளை அழுத்திக் கொண்டு இருக்கிறது! அவன் போன் செய்ய வரும் நேரத்தை எதிர்பாத்து, அவனைப் பற்றிய பல்வேறு நினைவுகளில் முழ்கி கிடக்கிறாள்.
அன்று யார் யாரோ போன் செய்ய வந்து, போன் பேசிவிட்டு செல்கிறார்கள்! அவள் எல்லோருடனும் அவனை ஒப்பிட்டு பாரத்துக் கொண்டு இருக்கிகிறாள்! யாருமே அவனைப் போல் தனித்துவமாய் இல்லை என்று அவளுக்குத் தோன்றுகிறது!
பல்வேறு விதமான குணம் கொண்ட இளைஞர்களும், பெண்களும் வந்து போய்கொண்டு இருக்க...
அவள் தனக்குத் தெரிந்த அத்தனை மனிதர்களையும் தன் நினைவுக்கு கொண்டு வந்து அவர்களோடு அவனை ஒப்பிட்டு பார்க்கிறாள்! அவன் எல்லோரையும் விட சிறந்தவன் என்றே அவளுக்குத் தோன்றுகிறது!
அந்த டெலிபோன் பூத் க்கு தினமும் வந்து போகும் அத்தனை வாடிக்கையாளர்களும் வந்து போய் விட்டார்கள். அவன் வழக்கமாய் வந்து போகும் நேரமும் வந்து.. கடந்து போய் விட்டது. வசுலுக்கு பூத் முதலாலி கூட வந்து போய்விட்டார்! அவன் மட்டும் இன்னும் வரவே இல்லை.?!
பூத் மூடுவதற்கான நேரம் ஆகிவிட்டது.
அவளுக்கு பெரும் ஏமாற்றம். என்றுமே இல்லாத அளவிற்கு இன்று, காலையில் இருந்தே அவனைப் பற்றிய நினைவுகளுடன்.. அவனை எதிர்பாத்து காத்துக் கிடந்ததினால் ஏற்பட்ட ஏமாற்றம்!
அவள் நம்பிக்கை இழந்து.. போன் பூத்தை மூட தயாரான நேரம் அவன் வந்தான்!
வழக்கம் போல், அவளைப் பார்த்ததும் அவனுடைய சிறு புன்னகை. அவளிடம் ஒரு வார்த்தை. வழக்கம் போல் போனில் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு, அங்கிருந்து அவன் கிளம்பிச் சென்றுவிடுகிறான்!
அவ்வளவுதான் இந்த சம்பவம்!
அவள் விகடன் புத்தகத்தில் பிரசுரமான ஓர் அழகான சிறுகதை இது! பாலு சத்யா என்பவர் இக்கதையின் ஆசிரியர்!
சரி...
இந்த மூன்று கதைகளுக்குள்ளும் இருக்கும் சம்பவங்கள் என்னென்ன என்று உங்களுக்கு நன்றாக புரிந்து இருக்கும் என நம்புகிறேன்..!
இனி இந்த சம்பவங்கள் எப்படி கதைகளாக மாற்றப் பட்டுள்ளன என்றும், அவ்வாறு மாற்றிய பின்பு அவை எந்தளவு ஒரு முழுமைப் பெற்ற கதைகலாக மாரியுள்ளது என்று அடுத்த பதிவில் மிக விரைவாகப் பார்க்கலாம்..!
உங்கள் கருத்துக்களை மறக்காமல் எழுதுங்கள்!