திங்கள், 15 டிசம்பர், 2014

மொபைல் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

ஆன் லைன் ஜாப் பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்பீர்கள்.  ஒரு கம்பியுட்டர் + நெட் கனைக் ஷன்+ உங்கள் ஓய்வு நேரம் சிறிதளவு. இது மூன்றும் உங்களிடம் இருந்தால் நீங்களும் ஆன் லைன் வேலை செய்யலாம். மிக எளிய வேலை.
குறிப்பிட்ட சில வெப் பக்கங்களை பார்வை இடுவது தான் உங்கள் வேலை.
ஊதியம்? உங்கள் ஆர்வம் + பொறுமை அடிப்படையில் கிடைக்கும்.
நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே உங்கள் வீட்டில் இருந்தபடியே செலவு செய்து குறைந்த பட்சம்  நாள் ஒன்றுக்கு ₹300 சம்பாதிக்க முடியும் என்றால் இதை விட வேறென்ன வேண்டும்?
என்ன வேலை? எப்படி செய்வது என்று அடுத்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இப்பொழுது...
ஆன்ட்ராய்ட் மொபைல் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்று மட்டும் பார்ப்போம்.
அதற்கு முன்பு என்னைப் பற்றி ஒரு சிறிய அறிமும்.
நான் ஒரு சரியான கேம்ஸ் பைத்தியம். Samsung mobile game ல ஆரம்பித்தப் பழக்கம். கேம்ஸ் விளையாடுவதற்கு என்றே பார்த்துப் பார்த்து ஒரு Pc வாங்கும் அளவுக்கு கேம்ஸ் மீது காதல் வந்து மயங்கி கிடந்தேன். பல விதமான கேம்ஸ் பலவித வாழ்க்கை முறை.
Assasing's creed brother hood game என்னை முழுதாய் அடிமை ஆக்கி விட்டது.
அதன் பிறகு புதிது புதிதாய் கேம்ஸ் தேடி ஓட ஆரம்பித்தேன் இன்று வரை ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
பலர், கேம்ஸ் தானே என மிகச் சாதாரனமாக நினைக்கிறார்கள். கேம்ஸ் விளையாடுவது ஒன்றும் சாதாறனமான விஷயம் கிடையாது. அது ஒரு வாழ்க்கை. அந்த வாழ்க்கை யை வாழவும், ரசிக்கவும் ரசிப்புத்தன்மை மிகுதியாய் இருக்க வேண்டும்.


அவ்வாறு இன்றி, மூலை மழுங்கிய நிலையில் இருக்கும் மந்த புத்திக்காரர்கள் யாரேனும் "அஸ்ஸாஸிங் க்ரீட்" மற்றும் "பிரின்ஸ் அப் பெர்ஷியா"  போன்ற கேம்ஸ் ஸை விளையாட முற்பட்டால்..
முதல் லெவல் அல்லது இரண்டு மூன்று லெவலில் முழி பிதுங்கி, நாக்குத் தள்ளி மயக்கம் வராத குறையோடு தப்பித்தோம் பிழைத்தோம் என அந்த மாய உலகத்தை விட்டே ஓட வேண்டியதாய் இருக்கும்.


நோகியா மெபைல் ல பாம்பு கேம் கூட விளையாடிப் பார்த்திராத என் நெருங்கிய நண்பர்  அன்பு ஒரு நாள்,   "பாலா, கம்பியுட்டர் கேம் னாலே கடுப்பு. ஏனோ எனக்கு விளையாடவே இன்ட்ரஸ்டா இல்லை."

நான் சொன்னேன்,  "கூழை குடிச்சுப் பார்க்காமல்  கூழ் னாலே எனக்கு பிடிக்காது னு சொல்றது ரொம்ப தப்பு."


சரி நாம் நம் தலைப்பை பற்றிப் பார்ப்போம்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேம்ஸ் விளையாட வேண்டும். போகும் இடம் எங்கும் நினைத்த நேரத்தில் கேம்ஸ் விளையாட வேண்டும் என்ற ஆவலில் தேடி பிடித்து 6 inch திரை உள்ள ஒரு மொபைல் வாங்கினேன்.

மொபைல் வாங்கி ஆயிற்று இனி கேம்ஸ் டவுண்லோட் செய்து விளையாட வேண்டியதுதான் என்ற நினைப்புடன் ப்ளே ஸ்டோர் ஓபன் செய்தால், அங்கே முக்கியமான கேம்ஸ் எல்லாம் ₹399 என்ற விலைப் ட்டியல் தலை சுற்ற வைக்கிறது. மொபைல் கேம்ஸ் க்கே இந்த விலையா?  என நினைத்த படி   'சரி, நமக்கு GTA கிடைத்தால் போதும் என பணம் செலவு செய்ய தயாராய் இருந்தாலும், எளிதில் வாங்க முடியாத அளவில் சுற்று வழி.?!


ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு இருக்க வேண்டும். ஆம் இருக்கிறது. அதில் தேவையான அளவில் பணமும் இருக்க வேணடும். எனக்கு அதில்தான் மிகப் பெரிய சிக்கல். என் வங்கி கணக்கு என்பது பாலைவனத்தில் தோண்டிய கிணறு போல.?!
நான் எனது வங்கி கணக்கை தூசு தட்டி புதுப்பிக்க வேண்டும். பிறகு  அதில் சிறிதளவு பணத்தை இருப்பில் வைக்க வேண்டும். அதற்கு என்று ஒரு நாளை ஒதுக்க வேண்டும். அதிலும் பிரச்சனை. ஞாயிறு மட்டுமே நான் Free. அன்று வங்கி விடுமுறை.?!
என்ன செய்வது என்று தீவிர தேடல் தொடங்கி இரண்டு நாள் தூக்கம் கெட்டப் பிறகு, மாற்று வழி ஒன்றும் குறுக்கு வழி ஒன்றும் கிடைத்தது.

(அதை சொல்லத்தான் இவ்வளவு பெறிய.   பில்டப்......)
குறுக்கு வழியை விட, மாற்று வழி பாதுகாப்பாகவும்  லாபம் தரக்கூடியதாகவும் இருப்பதால்  சற்றே சுய நலத்துடன் உங்களுக்கும் அந்த வழியை நான் பரிந்துறைக்கிறேன்.
உங்களிடம் Android mobile phone இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் ஆர்வத்திற்கும் திறமைக்கும் ஏற்றார் போல் ஒரு Apps பணத்தை வழங்குகிறது.

எனக்கு கேம்ஸ் ஏதும் வேண்டாம்  மொபைல் மூலம் சம்பாதிக்கும் பணம், என் தின செலவுக்கு மட்டுமே வேண்டும்  என நீங்கள் நினைத்தால் உங்கள் விருப்பம் போல் பெற்றுக் கொள்ளலாம்.
சரி முதலில் அந்த ஆப்ஸ் டவுண்லோட் செய்ய இந்த லிங்கை  

க்ளிக் .  http://bit.ly/RU28WE    செய்யவும்.

அல்லது  play store ல்  Free gift card என டைப் செய்து தேடிப் பார்க்கவும்.  மஞ்சல் மற்றும் பச்சை நிறத்தில் நடுவில்   "Free" என்ற டைட்டில் உள்ள Apps மட்டும் டவுண்லோட் செய்யுங்கள்.
மற்றவை யாவும் வேஸ்ட்.??!

டவுண்லோட் ஆனதும் இன்ஸ்டால் செய்து ஓபன் பன்னவும்.
அதில் Point Offers என ஒரு பட்டியல் இருக்கும். அதை க்ளிக் செய்து பார்த்தீர்கள் என்றால் அங்கே சில ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் பட்டியல் இருக்கும். அதில் ஏதேனும் ஒன்றை டவுண் லோட் செய்து விளையாடினால் உங்களுக்கு சில Points கிடைக்கும். அது போல் கிடைக்கும் Points எண்ணிக்கை சிறுக சிறுக சேர்ந்து  2500. என்ற முதல் இலக்கை நீங்கள் அடையும் பொழுது நீங்கள் $ 1 டாலர் சம்பாதித்து இருப்பீர்கள்.

நீங்கள் 70,000.    90,000. என்று ஆர்வத்துடன் Points சேர்த்தீர்கள் என்றால் உங்கள் வருமானமூம் $100.  $150 டாலர் என ஏறிக்கொண்டே போகும்.
மிக சுலபமாய் Points பெருவதற்கும் அதில் வழி இருக்கிறது.

ஒரு முக்கியமான வழி...
உங்கள் நண்பர்களுக்கு இந்த ஆப்ஸ் சை அறிமுகப் படுத்தி வைப்பதன் மூலம் அவர்கள் ஒவ்வொருத்தர் மூலமாகவும் உங்களுக்கு 200 Points கிடைக்கும்.
நாள் ஒன்றுக்கு உங்களால் எவ்வளவு Points சேகரிக்க முடியுமோ அவ்வளவு Points சேகரிக்கலாம். கட்டுப்பாடே கிடையாது.
Points சை டாலர் ஆக மாற்றி.,
டாலர் ரை உங்கள் ஆன் லைன் அக்கவுன்க்கு மாற்றி (ஒன் க்ளிக் போதும்)
பிறகு உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றினால் பிறகு ரூபாய் மதிப்பில் உங்கள் ATM ல் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். 

இந்த Apps சை இன்ஸ்டால் செய்த பிறகு, ஓபன் செய்தால் அதில் In but your friends code என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை க்ளிக் செய்து  மறக்காமல்   h4c83 என்ற இந்த என்னை பதிவு செய்தால் இலவசமாக உங்களுக்கு 100 Points கிடைக்கும்.

சில மொபைலில் Inbut your friends code என்ற இந்த பகுதி உடனே ஓபன் ஆகாமல் தாமதமாகலாம். அவர்கள் தினமும் முயற்ச்சி செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஓபன் ஆகிவிடும்.

ஏதேனும் சந்தேகம்  இருப்பின் கருத்து தெரிவிக்கும் பகுதியில் தெரியப்படுத்துங்கள். அன்றே உங்கள் சந்தேகம் தீர்த்து வைத்து உதவுகிறேன்.

அடுத்தப் பதிவில் பார்க்கலாம். நன்றி.

ஞாயிறு, 2 நவம்பர், 2014

திரைக் கதை எழுதுவது எப்படி? (3)

கடந்த இரண்டு பதிவில் கதைக்கு எடுத்தாளப்பட்ட மூன்று வெவ்வேறு சம்பவங்களை பார்த்தோம்!  மேலும் அந்த சம்பவங்கள் எப்படி கதைகலாக மாற்றப்பட்டுள்ளன என்று இப்பொழுது கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்! ஒரு சிறந்த திரைக்கதைக்கு அது மையம் கொண்டிருக்கும் கதையும் அதன் கருவும்தான் பலம் என்பதை எப்பொழுதும் மறக்காதிர்கள்! 

இந்த ஒரு எளிய சூத்திரத்தை அறியாமல் சிலர் படம் எடுக்க வந்ததன் விளைவுதான் இன்று தமிழ் சினிமாவில் நிறைய குப்பை படங்கலாக வந்து குவிந்து கொண்டு இருக்கிறது?!
நான் சமிபத்தில் (கடைசியாக தியேட்டரில்) பார்த்து ரொம்பவே கடுப்பாகிப் போன படம்...?! இரும்பு குதிரை!

சரி திரைக்கதையைப் பற்றி பார்ப்போம்...

திரைக்கதை என்பது... கதை+சம்பவங்களின் தொகுப்பு! அவ்வளவுதான் வேறொன்றும் இல்லை! என்ன கதை? எந்த மாதிரியான சம்பவங்களின் தொகுப்பு? 

அதில்தான் ஒரு வெற்றிகரமான சினிமாவின் சூட்சுமம் மறைந்து இருக்கிறது! ஆதனால் நாம் திரைக்கதையின் மையமான 'கதை' யை அதன் தன்மைகளை நன்றாக அராய்ந்து விடுவோம். பிறகு, திரைக்கதை பற்றி பார்க்கலாம்! மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் சற்று புரியாதது போல் இருந்தால், இந்த எளிமையான உதாரணம் மூலம் புரிந்து கொள்ளுங்கள்!

ஒரு செய்தி.. இதுதான் ஒரு கதையின் கரு!
ஒரு கதைக்கு அதன் கரு மிகவும் முக்கியம்! அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்!

உதாரணத்திற்கு ...

நம் நண்பன் ராஜா, பார்வை அற்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.. என்றால் ? இது ஒரு செய்தி! இந்த செய்தியில் கதைக்கு தேவையான கரு ஒன்று மறைந்துஇருக்கிறது இல்லையா?

யார் அந்த பெண்? திருமணத்திற்கு முன்பும் பின்பும் ராஜாவின் நிலை என்ன என்று சொன்னால் அது கதை!

இன்னும் விரிவாக, அந்த பெண்ணை ராஜா எங்கே என்ன சூழ்நிலையில் சந்தித்தான் என்றும் அவர்களுடைய திருமணம் எங்கே நடந்தது.. உடன் யாரெல்லாம் இருந்தார்கள் என்பது போல், ராஜாவின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை தொகுத்து சொல்வதுதான் திரைக்கதை!

இப்பொழுது ஓரளவிற்கு புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்!

சரி, இப்பொழுது நாம் கதையை பற்றி மட்டும் பார்ப்போம், திரைக்கதையை பற்றி பிறகு விரிவாக பார்க்கலாம்!
முதல் கதை....
ஒ.ஹென்றி யின் கதையும் அதன் சம்பவம் இதுதான்,

இரண்டு நண்பர்கள் பிரிந்து செல்கிறார்கள்.. 20 வருடங்களுக்குப் பிறகு, தங்கள் ஒப்பந்த படி, பிரிந்த இடத்திலேயே மீண்டும் சந்திக்கிரார்கள்.!
இதுதான் அந்த கதையில் சொல்லப் பட்டுள்ள சம்பவம்!

இந்த சம்பவத்தை உலக சிறுகதை மன்னன் ஒ.ஹென்றி தன் கதையில் எவ்வாறு பயன்படுத்தி ஒரு தேர்ந்த சிறுகதையை படைத்துள்ளார் என்று இப்பொழுது பார்ப்போம்!


மீண்டும் முதலில் இருந்து...

இரண்டு நண்பர்கள் பேசிக் கொள்கிறார்கள், முடிவில் ஒரு ஒப்பந்தத்துடன் ஒரு நண்பன் மட்டும் பிழைப்பு தேடி தொலைதூர ஊருக்கு பிரிந்து செல்கிறான்!
அவர்கள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் இதுதான், 
20 வருடங்களுக்குப் பிறகு யார் எந்த நிலையில் இருந்தாலும் இதே மாதத்தில் இதே தேதியில் இந்த நேரத்தில் இதே இடத்திற்கு வந்து, முதலில் வருபவர் மற்றவர்க்காக காத்திருக்க வேண்டும்!.

20 வருடங்களுக்குப் பிறகு,

ஒப்பந்த படி, வெளியூர் சென்றிருந்த நண்பன் முதலில் வந்து விடுகிறான். தங்கள் ஒப்பந்த படி தன்னை தேடி நண்பன் வருவான் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறான். சிறிது தாமதமாக அவனுடைய நன்பனும் வந்துவிடுகிறான். ஒருவரை ஒருவர் ஆனந்தத்துடன் கட்டி தழுவிக் கொள்கிறார்கள்.

கவனிக்கவும் இதுதான் அந்த கதையில் உள்ள சம்பவம்.?! இதுதான் நிகழ்வு என்றால்...

இதை அப்படியே சொல்வதில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவு அல்லவா..?

இதை ஓ.ஹென்றி எவ்வாறு மிக சுவாரஸ்யமாய் மாற்றி சொல்லி இருக்கிறார் என்று இப்பொழுது பார்ப்போம்!

மீண்டும் முதலில் இருந்து!

அதற்கு முன்பு பெரும்பாலான கதைகளில் பயன்படுத்தப் படும் ஒரு சூத்திரத்தை தெரிந்து கொள்ளுங்கள்,

ஒரு சம்பவம் (கதை) + சிறிது கற்பனை!!

கதை எழுதும் போது இந்த சூத்திரத்தை பயன்படுத்தி நீங்கள் கதை எழுதினிர்கள் என்றால் ஒரு சாதாரனமான சம்பவத்தைக் கூட மிக அருமையான கதையாக மாற்றிவிடலாம்!

எப்படி?

விரிவாகப் பார்க்கும் முன்...

இப்பொழுது ஒ.ஹென்றின் கதையைப் பார்த்து விடலாம்...

இருபது வருடங்களுக்குப் பிரகு, இரண்டு நண்பர்களும் சந்தித்துக் கொள்கிறார்கள். மிகுந்த மகிழ்ச்சியோடு இருவரும் கட்டித் தழுவிக்கொள்கிறார்கள். பிறகு இருவரும் கை கோர்த்துக் கொண்டு பேசியபடி இருளான சாலையில் நடந்து செல்கிறார்கள். ஓர் இடத்தில் தெரு விளக்கின் வெளிச்சத்திற்கு வருகிறார்கள், ஒருவரை ஒருவர் ஆவலுடன் முகம்பார்த்துக் கொள்கிறார்கள்.
வெளியூரில் இருந்து வந்த நண்பனினன் முகம் சட்டென்று மாறுகிறது..
அவன், அதிர்ச்சி அடைந்து போய் கேட்கிறான், "ஏ..ய்... யார் நீ? என் நண்பனின் முக சாயல்ல இல்லையே நீ.." 
அவனிடம் இருந்து தன்னுடைய கையை விடுவித்துக் கொள்ள முயற்ச்சிக்கிறான், அப்பெழுதுதான் தெரிகிறது தன் கையில் விலங்கு மாட்டி இருக்கிறது என்று?!

வந்தவன் சொல்கிறான், "உண்மைதான். நான் உன்னுடைய நண்பன் இல்லை! என்னைப் பற்றி நீ தெரிந்து கொள்வதற்கு முன்பு, இந்த கடிதத்தைப் படி!" 

அவன் கொடுத்த கடிதத்தை வாங்கிப் படிக்கிறான்.

           சாரி... நண்பா. நம் ஒப்பந்தப்படி நானும் 
      உன்னை காண ஆவலோடு வந்தேன். நீ சிகரெட்
     பற்ற வைக்கும் போதுதான் தெரிந்தது, நீ 
    பக்கத்து மாநில காவல் துறையால் தேடப்படும் 
         ஒரு முக்கிய குற்றவாளி என்று?!
      காலம் என்னை ஒரு காவல் துறை அதிகாரியாக 
             ஆக்கி இருந்தாலும்.. 
       நான் உனது நண்பனாக இருப்பதால் 
      என்னால் உன்னை கைது செய்ய முடியவில்லை. 
        இந்த இருபது வருடம் நம் தோற்றத்தையும் 
            நம் வாழ்க்கை முறையையும் 
     ரொம்பவே மாற்றி இருக்கிறது. நீ திருந்தி வரும்           நாட்களுக்காக....

அவ்வளவுதான் இந்த கதை!

இப்பொழுது சொல்லுங்கள்.. முன்பு பார்த்த சம்பவத்தை விடவும் இப்பொழுது கதையில் சுவாரஸ்யம் கூடி இருக்கிறது அல்லவா?!

இந்த கதையில் எதார்த்த நிகழ்வின் பங்கு என்ன? கற்பனையின் பங்கு என்ன என்று உங்கள் அறிவு பலத்திற்கு ஏற்றாற்ப் போல் நீங்களே அலசி பாருங்கள். இந்த கதை எங்கிருந்து வளர்ந்து இருக்கும் என உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும்!

சரி, இப்பொழுது அடுத்த கதையைப் பார்ப்போம்!

கிராமத்தில் ஆதரவு அற்ற வயதான தம்பதியர். ஆடு மேய்ப்பது தொழில். ஒரு நாள் வழக்கம் போல் ஆடு மேய்த்துக கொண்டு இருக்கும் பொழுது, இரண்டு வெள்ளை காரர்கள் வந்து அந்த ஆடு மேய்க்கும் கிழவரிடம் ஏதோ விசாரிக்கிறார்கள். 

முதியவர்க்கு புரியவில்லை. அவர் பயந்த படி ஏதோ சொல்கிறார் அது அந்த வெள்ளை காரர்களுக்கு புரியவில்லை! பேச்சின் முடிவில், வெள்ளைகாரர்கள் முதியவர்க்கு நிறைய பணம் தருகிரார்கள்! பணத்தோடு முதியவர் வீட்டுக்குப் போகிறார்.

இதுதான் இரண்டாவதாக சொல்லப் பட்ட கதையின் சம்பவம். உண்மை தானே?

இப்பொழுது, இந்த சம்பவத்தை வைத்து ஆர்.கே நாராயணன் அவர்கள் எவ்வாறு ஒரு புகழ் பெற்ற நகைச்சுவை கதையாக மாற்றி இருக்கிறார் என்று இப்பொழுது பார்ப்போம்.!

மீண்டும் முதலில் இருந்து... வேண்டாம் என நினைக்கிறேன், அதனால் கதையின் முக்கியமான நிகழ்வை மட்டும் பார்ப்போம்.

(தோராயணமாக அவர்களுடை உறையாடல் கதையில் இவ்வாறு )

வெள்ளையர்கள்..ஆங்கிலத்தில் பேசுகிறார்கள், "Good Morning Old man" 

முதியவர் தன் தாய் மொழியில் பேசுகிறார்,  "ஐயா, எனக்கு எதுவும் தெரியாதுங்க!

வெள்ளையர்கள்.. (ஆங்கிலத்தில்)  "எப்படி இருக்கிங்க? நலமா?"

முதியவர்,  "ப்பைனா? என்னால அபராதம் எல்லாம் கட்ட முடியாதுங்க. நா ரொம்ப ஏழைங்க."

வெள்ளையர்கள்,  "இந்த சிலை (ஐயனார்சிலை) உங்களுடையதா? ரொம்ப அழகா இருக்கு!"

முதியவர்,   "தெரியாம இங்க வந்துடேங்க. நாளையில இருந்து இந்த பக்கமே வரமாடேங்க "

வெள்ளையர்கள்,  "நாங்க பேசுவது உங்களுக்குப் புரிதா?"

முதியவர்,  இதோ இப்பவே நா ஆடுகள ஓட்டிகிட்டு கிலம்புறேங்க! 
 
வெள்ளையர்கள், உங்கள் சிலையை எங்களுக்கு விலைக்குத் தருவீர்களா?"

முதியவர்,  பணமா? ஓ... நீங்கள் ஆடு வாங்க வந்திங்களா? நா என்னமோனு பயந்துடேன்."

வெள்ளையர்கள், ஆமாம். பணம் தருகிறோம், எவ்வளவுனு விலையை சொல்!"

முதியவர், "எல்லா ஆட்டையும் வாங்கிகிட்டாலும் எனக்கு சந்தோஷம் தான். இந்த சத்தியுள்ள ஐயனார் சாமிதான் உங்களை என்கிட்ட கூட்டிடு வந்து இருக்கார்"

வெள்ளையர்கள்  "எங்களுக்கு இந்த குதிரையும் அந்த மீச வச்ச வீரன் சிலை மட்டும் போதும்."பதினைந்தாயிரம் தருகிறோம்.

முதியவர்,  "இவ்வள பணத்தை என் பொண்டாட்டி பார்த்தா ரொம்ப சந்தோஷ படுவா.

வெள்ளையர்கள்,  "நாங்கள் போய் கூலி ஆட்களை கூட்டிவந்து, இன்றே சிலையை எடுத்துடு போகலாம் இல்லையா?

முதியவர், "முதல்ல நான் போய்டுரேன். நா இருந்தா ஆடுங்க எதுவும் வண்டில ஏராதுங்க!

முதியவர் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தான் திறமையாய் ஆடு வித்த கதையை சொல்லி, பணத்தை என்னிப் பார்த்து சந்தோஷ பட்டுக் கொண்டு இருக்கும் பொழுது, மேய்ச்சல் நேரம் முடிந்து
மொத்த ஆட்டுக் கூட்டமும் வீடு வந்து  சேர்கிறது!

முதியவர் ஒன்றும் புரியாமல் பணத்தையும் ஆடுகளையு மாரி மாரி பார்த்படி உட்கார்ந்து இருப்பதாய் கதை முடியும்!

சரி இப்பொழுது மூன்றாவது கதையை பார்ப்போம்.

டெலிபோன் பூத்தில் வேலை செய்யும் ஒரு பெண். அவளுக்கு, அங்கே போன் செய்ய வரும் ஒரு இளைஞன் மீது அதிகப்படியான ஈர்ப்பு ஏற்படுகிறது. 
ஒரு நாள் முழுவதும் அவனைப் பற்றிய நினைவுகளில் சிக்கி தவிக்கிறாள். அங்கே போன் பேச வரும் பல்வேறு குணம் கொண்ட மனிதர்களுடன் அவனை ஒப்பிட்டு பார்த்துக் கொண்டு, அவன் வழக்கமாய் வரும் நேரத்தை எதிர் பார்து காத்துக் கிடக்கிறாள்.

பூத் மூடும் நேரத்தில் கடைசி மனிதனாக அவன் வருகிறான்.

வழக்கமாய் பேசும் நண்பனுக்கு போன் செய்து,    
'தன்னுடைய வேலை வெளியூர்க்கு மாற்றப் பட்டுள்ளது என்றும், இன்று இரவே இந்த ஊரில் இருந்து புரப்பட்டாக வேண்டும், என்றும் பேசுகிறான். 
அந்தப் பெண் எல்லாவற்றையும் கேட்டபடி, செய்வதறியால் தவிப்போடு உட்கார்ந்து இருக்கிறாள்.

அந்த இளைஞன், போன் பேசி முடித்துவிட்டு,  போன் 'பில்' லுக்கு காசை கொடுத்துவிட்டு அவளிடம்   "வரேன்"   என ஒற்றை வார்த்தையில் சொல்லிக் கொண்டு  பில் பேப்பரை கூட வாங்க மறந்தவனாய் அவசரமாக கிலம்பிப் போகிறான்.

இதோடு இந்த கதை முடிகிறது!

நாம் பார்த்த இந்த மூன்று கதைகளிலும் ஒரு எதார்த்த சம்பவமும் கொஞ்சம் கற்பனை யும் கலந்து இருக்கிறது என்பதை உங்களால் அறிய முடிகிறதா?

இதுதான் ஒரு கதையின் சூத்திரம்.

இந்த சூத்திரப்படி எழுதப்படும் கதைகள்  மக்கள் மனதில் காலம் கடந்து நிற்கும்!

அவ்வாறு இன்றி முழுக்க கற்பணையில்..

Hero ஊர்ல இருக்கிற பிச்சை காரன்களை எல்லாம் கடத்துரான் ..

என்று ஆரம்பித்தால்..

அந்த கதை உயிரோட்டம் இன்றி பார்ப்போர் அல்லது படிப்போர்க்கு எந்த வித அனுபவ பிடிப்பும் ஏற்படாமல், குப்பை படைப்பாகத்தான் இருக்கும்!

உலகப் புகழ் பெற்ற கற்பனை கதைகளா கருதப்படும்..
'ஜங்குல் புக்'    'டார்ஸான்'    'ஸ்பைடர் மான்'   போன்ற  இன்ன பிற கதைகள் யாவும் , எதார்த்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கற்பனை கதைகள்!

அதாவது,  எதார்த்தம் கொஞ்சம் + நிறைய கற்பனை!

உங்களால் முடிந்தால்...
டார்ஸன் கதையில் மறைத்துது வைக்கப் பட்டுள்ள உண்மை சம்பவத்தை கண்டு பிடியுங்கள்!

உங்கள் திறமைக்கு இது ஒரு சவால் என எடுத்துக் கொள்ளுங்கள்..

மீண்டும் அடுத்த பதிவில் பார்ககலாம்!


வெள்ளி, 10 அக்டோபர், 2014

திரைக்கதை எழுதுவது எப்படி? [2]

கடந்த பதிவில், ஒரு சம்பவத்தை எப்படி கதையாக மாற்றுகிறார்கள் என்பதை விளக்க மூன்று உதாரணங்கள் தருவதாய் சொல்லி இருந்தேன். அதில் ஒரு சம்பவமாய் ஓ.ஹென்றி யின் சிறுகதை யை பார்த்தோம். மேலும் இந்த கதையைப் பற்றி பார்ப்பதற்கு முன், மற்ற இரண்டு கதைகளுக்கான சம்பவங்களையும் பார்த்துவிடுவோம்!

சம்பவம் 2 (கதை)
ஒரு குக்கிராமம்! அங்கே வாழும் ஆதரவற்ற முதிய தம்பதியர்!
ஆடு வளர்ப்பு மூலம் அவர்களுடை வாழ்வாதாரம் சிக்கல் இன்றி போய்க்கொண்டிருக்கிறது!  முன்புபோல் இப்பொழுதெல்லாம்  பெரியவரால்  ரொம்ப தூரம் போய் ஆடு மேய்க்க  முடிவதில்லை! ரோம்பவே வயதாகி விட்டது! ஊருக்கு அருகிலேயே கூட, இப்பொழுதெல்லாம் ஆடு மேய்ப்பது ரொம்பவே சிரமமாக இருக்கிறது.

இருப்புக்கு இரண்டு குட்டிகள் போக மற்ற எல்லாவற்றையும் விற்றுவிட்டால் வேலைச் சுமை குறையும் என்று நினைக்கிறார். நல்ல வியாபாரி கிடைக்க வேண்டும்!

ஒரு நாள், வழக்கம் போல்  கிராமத்திற்கு வெளியே ஒரு வரண்ட மேய்ச்சல் நிலப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்! பசுமையான புற்களை விட வறண்டு காய்ந்த புற்கல்தான் இங்கே அதிகம்!  ஆனாலும் இந்த இடம் பெரியவர்க்கு மிகவும் பிடித்த இடம்!
கம்பீரமான ஐயனாரப்பன் சிலையின் கீழ் இருக்கும் மேடையில்
உட்கார்ந்து கொண்டு, சற்று தூரத்தில் தெரியும் சாலையை வேடிக்கைப் பார்ப்பது என்றால் யாருக்குத்தான் பிடிக்காது?

கிராமத்து சாலையில்  எப்பொழ்தாவதுதான் வாகனங்கள் வரும்! அதை பார்கிற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது!

அன்று அப்படித்தான் ஒரு வாகனம் வந்தது. சற்று பெரிய வாகனம். அதுபோல் ஒரு வாகனத்தை பெரியவர் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை! பெரியவர் சற்று உற்சாகத்துடன் எழுந்து உட்கார்ந்தார். சாலையில் போய்க்கொண்டு இருந்த வாகனம் சட்டென்று திரும்பி, சாலையை விட்டு விலகி பெரியவரை நோக்கி மேய்ச்சல் நிலத்திற்குள் வேகமாக வந்தது! பெரியவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை!

அந்த வாகனம் வந்து,  பெரியவர் அருகே நின்றது. வாகனத்தில் இருந்து இரண்டு வெள்ளைகாரர்கள் இறங்கினார்கள். ஆம் வெள்ளைகாரர்கள்!

பெரியவர் இதற்கு முன்பு இவ்வளவு நெறுக்கத்தில் வெள்ளையர்களைப் பார்த்ததே இல்லை!

அவர்கள் ஆங்கிலத்தில் ஏதோ கேட்டார்கள். பெரியவர்க்கு ஒன்றும் புரியவில்லை!

பெரியவர் பயந்தபடி தன் தாய் மொழியில் ஏதோ சொன்னார், அது அந்த வெள்ளையர்களுக்கு புரியவில்லை!

இந்த குழப்பமான உறையாடல் சிறிது நேரம் நீடிக்கிறது. பெரியவர்க்கு ஒன்றும் புரியவில்லை, விட்டால் போதும் என நினைக்கிறார். வெள்ளையர்கள் சட்டென்று ஒரு பெரும் தொகைக்கு மதிப்புடைய ரூபாய் தாள்களை எடுத்து பெரியவர் கையில் தினிக்கிறார்கள். பெரியவர் இவ்வளவு பணத்தை மொத்தமாய் பார்த்ததே இல்லை!

பெரியவர்க்கு, இப்பொழுது ஏதோ புரிகிறது. இவ்வளவு நேரம் இந்த வெள்ளையர்கள் பணத்தைப் பற்றிதான் ஏதோ பேசி இருக்கிறார்கள். பெரியவர் சந்தோஷத்துடன், சிரித்தபடி ஏதோ சொல்ல, வெள்ளைகாரர்கள் ஏதோ புரிந்தார்ப்போல் தலையை ஆட்டி பதிலுக்கு சிரிக்கிறார்கள்.

இவ்வளவு பணத்தை தன் மனைவியிடம் கொடுத்தால் அவள் ரொம்பவே சந்தோஷப்படுவாள் என நினைத்துக் கொண்டு, ஆடுகளை அங்கேயே விட்டு விட்டு, வெள்ளையர்களிடம் சொல்லிக்கொண்டு , முதலில் பெரியவர் அங்கிருந்து கிளம்பி தன் வீட்டுக்குப் போகிறார்.

இதுதான் கதை!  இதில் இருக்கும் சம்பவம் என்ன என்று உங்களுக்குப் புரிகிறதா?

இந்த சம்பவத்தை வைத்து,  உலகப் புகழ் பெற்ற இந்திய எழுத்தாளர் ஆர்.கே  நாராயணன் அவர்கள் எழுதிய ஒரு சிறுகதை மிக சுவாரஷ்யமா இருக்கும். இந்த கதையை நீங்கள் படித்து இருப்பிர்கள் என நினைக்கிறேன். மேலும் இந்த கதையைப் பற்றி நாம் விரிவாக பேசும்முன்...

மூன்றாவது   சம்பவம் +கதையை  பார்த்துடுவோம்!

தமிழ் இலக்கியம் கடலென பரந்து விரிந்து கிடக்கிறது. அதில் அதிகம் அரியப்படாத ஒரு எழுத்தாளர், தன்னுடை கதையில் கையான்ட ஒரு சாதாரணமான சம்பவம் இது!

ஒரு டெலிபோன் பூத்! அங்கே வேலை செய்யும் ஒரு பெண். அந்த பெண்ணுக்கு,  தினமும் நேரம் தவராமல் போன் செய்ய வரும் ஒரு இளைஞன் மேல் ஒரு வித இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது. முன்பெல்லாம் எப்பொழுதாவதுதான் அவன் நினைவு வரும்.!

ஆனால் இன்று?!

காலையில் இருந்தே அவன் நினைவு. அதுவும் அதிகமாகவே அவளை  அழுத்திக் கொண்டு இருக்கிறது! அவன் போன் செய்ய வரும் நேரத்தை எதிர்பாத்து, அவனைப் பற்றிய பல்வேறு நினைவுகளில் முழ்கி கிடக்கிறாள்.

அன்று யார் யாரோ  போன் செய்ய வந்து, போன் பேசிவிட்டு செல்கிறார்கள்! அவள் எல்லோருடனும் அவனை ஒப்பிட்டு பாரத்துக் கொண்டு இருக்கிகிறாள்! யாருமே அவனைப் போல் தனித்துவமாய் இல்லை என்று அவளுக்குத் தோன்றுகிறது!

பல்வேறு விதமான குணம் கொண்ட இளைஞர்களும், பெண்களும் வந்து போய்கொண்டு இருக்க...

அவள் தனக்குத் தெரிந்த அத்தனை மனிதர்களையும் தன் நினைவுக்கு கொண்டு வந்து அவர்களோடு அவனை ஒப்பிட்டு பார்க்கிறாள்! அவன் எல்லோரையும் விட சிறந்தவன் என்றே அவளுக்குத் தோன்றுகிறது!

அந்த டெலிபோன் பூத் க்கு  தினமும் வந்து போகும் அத்தனை  வாடிக்கையாளர்களும் வந்து போய் விட்டார்கள். அவன் வழக்கமாய் வந்து போகும் நேரமும் வந்து.. கடந்து போய் விட்டது. வசுலுக்கு பூத் முதலாலி கூட வந்து போய்விட்டார்! அவன் மட்டும் இன்னும் வரவே இல்லை.?!

பூத் மூடுவதற்கான நேரம் ஆகிவிட்டது.

அவளுக்கு பெரும் ஏமாற்றம். என்றுமே இல்லாத அளவிற்கு  இன்று, காலையில் இருந்தே அவனைப் பற்றிய நினைவுகளுடன்.. அவனை எதிர்பாத்து காத்துக் கிடந்ததினால் ஏற்பட்ட ஏமாற்றம்!

அவள்  நம்பிக்கை இழந்து.. போன் பூத்தை மூட தயாரான நேரம் அவன் வந்தான்!

வழக்கம் போல், அவளைப் பார்த்ததும் அவனுடைய சிறு புன்னகை.  அவளிடம் ஒரு வார்த்தை.  வழக்கம் போல் போனில் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு, அங்கிருந்து அவன் கிளம்பிச் சென்றுவிடுகிறான்!

அவ்வளவுதான் இந்த சம்பவம்!

அவள் விகடன் புத்தகத்தில் பிரசுரமான ஓர் அழகான சிறுகதை இது!  பாலு சத்யா என்பவர் இக்கதையின் ஆசிரியர்!

சரி...
இந்த மூன்று கதைகளுக்குள்ளும் இருக்கும் சம்பவங்கள் என்னென்ன என்று உங்களுக்கு நன்றாக புரிந்து இருக்கும் என நம்புகிறேன்..!

இனி இந்த சம்பவங்கள்  எப்படி கதைகளாக மாற்றப் பட்டுள்ளன என்றும், அவ்வாறு மாற்றிய பின்பு அவை எந்தளவு ஒரு முழுமைப் பெற்ற கதைகலாக மாரியுள்ளது என்று அடுத்த திவில் மிக விரைவாகப் பார்க்கலாம்..!

உங்கள் கருத்துக்களை மறக்காமல் எழுதுங்கள்!

திங்கள், 6 அக்டோபர், 2014

திரைக்கதை எழுதுவது எப்படி?

நேற்றைய இரவு என் நண்பன் ஏழைப்பங்காளன் (மிரள வேண்டாம், இதுதான் அவனுடைய உண்மையான பெயர்) புல் போதையில் வந்து என் தூக்கம் கெடும்படி ஒரு மொக்க உரையாடலை நிகழ்த்தி விட்டு போனான்! பெரும்பாலன குடி ராஜாகளுக்கு போதையில் இருக்கும் போதுதான் பாசம் பொங்கும்! பல முறை... பல நாட்கள் சொல்லி இறுக்கிறேன் "குடிச்சுட்டு நைட் டைம் ல என்னை தேடி வீட்டுக்கு வராதேடா" சரி விட்டுவிவோம்! அவன் என்னைப் பார்க்க வந்த காரணம் இதுதான்... 'பாலா எனக்கு புதுசா ஒரு கதை தோனுச்சு.. அதை உங்கிட்ட சொல்லலாம்னு தான் வந்தேன். எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை, சரி இவனுக்கு னு ஒரு பத்து நிமிடம் ஒதுக்கியாச்சு, அந்த பத்து நிமிசம் இவன் என்ன பேசனுமோ பேசட்டும்,, என்று நினைத்து சோல்லுடா என்ன கதை? என்றேன். அவன் சொன்ன கதையின் ஆரம்பம் இதுதான், நம்ம நாட்டுல பிச்சகாரங்க அதிகமாய்ட்டாங்கல.. அவங்கல வச்சி என்னடா பன்னலாம்? அவன் கேட்ட கேல்வி ல நான் ரொம்பவே கடுப்பாகிப்போனேன்.. இருந்தாலும் வெளியே காட்டிக்காம சொன்னேன், அவங்கள வச்சி என்ன பன்றது பிச்சதான் எடுக்லாம். உடனே அவன் குறுக்கிட்டு, "அதான் இல்ல. இந்த கதைல என் ஹீரோ ஊர்ல இருக்கிற எல்லா பிச்சகாரங்களையும் கடத்துரான்" எனக்கு கிர்னு தலைசுற்ற ஆரம்பித்தது! இப்பொழ்து உங்களுக்கு எப்படி இருக்கிறது..?! அவன் ஏதோ விளையாட்டுக்கு சொல்கிறானோ என்று ஆரம்பத்தில் தவராகக்கூட நினைத்தேன், ஆனால் அதற்கு அடுத்த பத்து நிமிடங்களில் என் காதில் இரத்தம் வராததுதான் மிச்சம்! சில வறுடங்களுக்கு முன்பு (2005) இயக்குனர் பாலா அவர்களிடம் உதவிஇயக்குனராக சேரவேண்டும் என்ற கனவோடு சென்னையில் சுற்றி திறிந்து கொண்டிருந்த காலம்! அப்பொழ்து நிறைய புத்தகங்கள் படிக்கிற வாய்ப்பும் நேரமும் நிறையவே கிடைத்தது! உள்ளூர் இலக்கியம் முதல் உலக இலக்கியம் வரை படிக்கப் படிக்க கதை என்பது என்ன? எவ்வாறு ஒரு சிறந்த கதையை தேர்ந்தெடுப்பது? (கவனிக்கவும், ஒரு இயக்குனரோ, கதாசிரியரோ யாருமே ஒரு சிறந்த கதையை உருவாக்குவதே இல்லை! இதுதான் நிஜம்! அவர்களுடைய வேலை ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுப்பது மட்டுமே!) கதை ஓக்கே! அது என்ன நல்ல கதை? அது வேற ஒன்றும் இல்லை கேட்கவும்- பார்க்கவும் - எழுத்து மூலம்சொல்லப்பட்ட கதையென்றால் படிக்கவும் ரெம்பவே சுவாரஸ்யமாய் இருக்க வேண்டும்! இதுதான் முதல் விதி! இதை நான் சொல்லவில்லை நான் படித்த ஒரு சில புத்தகங்கள் அப்படித்தான் சொல்லி கொடுத்தன! ஒரு நல்ல கதை எப்படி அடையாலம் கான்பது? அந்த அனுபத்தை பெறத்தான் நீங்கள் நிறைய படிக்க வேண்டும்! நிறைய படித்துப் படித்து நிறைய கற்க வேண்டும்! யார் யார் என்னெனன் கதைகளை எப்படியெல்லாம் சொல்லி இருக்கிறார்கள் என்ற ஆழ்ந்த புரிதல் ஏற்பட வேண்டும்! பிறகு உங்கள் வாழ்க்கையில், உங்கள் அனுபத்தில் இருந்தே ஏதேனும் ஒரு சம்பவத்தை எடுத்து தூசு தட்டி (அதாவது உங்கள் நினைவுக்கு கொண்டுவந்து) அந்த அனுபவத்தை கதையாக்குவது ஒன்றுதான் கதை எழுத மிகச்சிறந்த வழி, மிகச் சுலமான வழியும் இதுதான்! ஒரு வேலை உங்கள் வாழ்க்கையில் சுவாரஸ்யமான சம்பவங்களோ நிகழாதது போல் உங்களுக்கு தோன்றினால், அது நிஜமில்லை! உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் மூட்டை மூட்டையாய் அவர்களுக்கே மட்டும் கிடைத்த அனுபவங்கள் உண்டு! அந்த அனுபவங்களை வைத்து அவர்களால் கதை பண்ண முடிய வில்லை என்பதுதான் உண்மை! ஒரு வேலை உங்கள் அனுபவத்தை வைத்து கதை பன்ன உங்களுக்கு விருப்பம் இல்லாமல் போகலாம்! இது போன்ற சூழலில் உங்க ஊரில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களையோ, அல்லது இன்னும் நெறுக்கமாய் நீங்கள் பார்த்த, பழகிய மனிதர்களின் வாழ்வில் இருந்து கதைக்கான சம்பவங்களை தேர்ந்தெடுத்து பிறகு கதையாக்குவது ரொம்பவும் நல்லது. இது போன்று உருவாக்கப்படும் கதைகளில் மட்டும்தான் அந்த மக்களின் பண்பாடும் கலாச்சாரமும் முழ்மையாக வெளிப்படும்! ஒரு நல்ல கதையும், நல்ல சினிமாவும் இதன் அடிப்படையில்தான் அளவிடப்படுகிறது! உதாரணத்திற்கு.... சென்ற வறுடம் வெளவந்த, 'மதயானைக் கூட்டம்' ஒரு நல்ல திரைப்படம்! மேலும் ஒரு சம்பவத்தை எப்படி சிறுகதை ஆககுவது என்று கற்றுக்கொள்ள, நிறைய சிறுகதைகளை தேடிபிடித்து படியுங்கள். தமிழில் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களுடைய துணையெழுத்து மற்றும் கதாவிலாசம்" என்ற இரண்டு புத்தகங்களே போதும், ஒரு சம்பவத்தை எப்படி கதையாக்குவது என்று கற்றுத்தர?! சரி.. நான் கற்றுக் கொண்ட ஒரு எளிமையா சூத்திரத்தை இப்பொழுது உங்களுக்கு கற்றுத்தருகிறேன்.. நிச்சயம் இது ஊங்களுக்கு உதவும்! ஏவ்வாறு எனில் அனைத்து விதமான கதைகளுக்குள்ளும் ஒளிந்திருக்கும் அடிப்படை விஷயமே இதுதான்! அதனால் கொஞ்சம் கவனமாக படிக்கவும். எனக்கு தெரிந்த வரையில் இவ்வளவு எளிமையாய் யாருமே விளக்கி சொன்னதே இல்லை! மூன்று சம்பவங்களைத் தருகிறேன் கவனமாக படியுங்கள்! 1) இரண்டு நண்பரகள் பேசிக்கொள்கிறார்கள், "வாழ்க்கையில் முன்னேறி பணம் காசுனு சந்தோஷமா நாம வாழனும்னா இந்த ஊரை விட்டு வெளியேறி, தலைநகரம் போய் ஏதாவது தொழில் செய்தால்தான் நடக்கும்! அந்த யோசனையை மற்றொறு நண்பன் ஏற்றுக்கொள்ளவில்லை! ஒரு நிபந்தனையுடன் ஒருவன் மட்டுமே தலைநகரத்திற்கு பிழைப்பு தேடிப்போகிறான்!? அவர்கள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட நிபந்னை இதுதான், "இருபது வறுடம் கழித்து யார் எந்த நிலையில் இருந்தாலும், இதே நாள்ல இதே இடத்துக்கு இதே நேரத்திற்கு வந்து மற்றவர்க்காக காத்திருக்கனும்! இன்றோடு இருபது வறுடங்கள் ஓடிவிட்டது, இன்றுதான் இருபது வறுடங்களுப்பிறகு சந்திக்கும் நாள்! தலைநகரம் பிழைப்பு தேடி சென்ற நண்பன் சரியான நேரத்திற்கு வந்து தன்னுடைய இளமை கால நண்பனை காண அந்த இருளில் காத்திருக்கிறான்! நேரம் போய்ககொண்டு இருக்கிறது. நண்பன் இன்னும் வரவில்லை! இரவு நேரம் என்பதால் சாலையில் மனித நடமாட்டமே இல்லை! ஒரு போலிஸ்காரர் மட்டும் ரோந்து போய்க்கொண்டு இருக்கிறார்! மெதுவாய் தூரல் போட்டுக்கொண்டு இருக்கிறது! ரோந்து போன போலிஸ்காரர் திரும்பி வருகிறார். இவன் வெகுநேரம் இருளில் தனியே நிற்பதைக் கண்டு, அவனிடம் விசாரிக்கிறார். அவன் ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் சொல்கிறான்! அவன் சிகரெட் பற்ற வைக்கும் போது போலிஸ்காரர் அவனுடைய முகத்தைப் பார்க்கிறார். அவன் கையில் வைர கற்கள் பதித்த கோல்ட் வாட்ச்! அவனுடைய பணக்கார தோற்றம் கண்டு, "உங்கள் நண்பரை சந்திக்க வாழ்த்துக்கள் " என கூறி கை குலுக்கிவிட்டு போலிஸ்காரர் கிளம்பிப் போகிறார. அதன் பிறகு சிறிது நேர காத்திருப்பில் ரெய்ன் கோட் பேட்டபடி அவனது நண்பன் வந்து பெயர் சொல்லி அழைக்கிறான். உற்சாகத்துடன் இருவறும் கட்டி அனைத்துக் கொள்கிறார்கள்! இது ஒரு சம்பவம்! இந்த சம்பவத்தை வைத்து 'உலக சிறுகதை மன்னன்" ஓ.ஹென்றி அருமையான கதை ஒன்றை எழுதி இருப்பார்.! அந்த கதையை நீங்கள் படித்து இருக்கிறிர்களா? இந்த சம்பவம் கதையாக மாரும்போது என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறது என்பது பற்றியும், மேலும் இரண்டு கதைகளைப்பற்றியும் அடுத்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்! உங்கள் கருத்துக்களை மறக்காம எனக்கு எழுதுங்கள், நான் தொடர்ந்து எழுத உதவியாய் இருக்கும்!

சனி, 4 அக்டோபர், 2014

மாந்திரீகம் கற்கலாம் வாங்க...

Once opon in a Time...
முன்பு ஒரு காலத்தில் நம் இந்திய தேசத்தில் சர்வ வல்லமை படைத்த சித்தர்கள் பலர் வாழ்ந்தார்கள் என்பதை நாம் சில பல புத்தகங்களின் வாயிலாக படித்து அறிந்து இருக்கிறோம். அவர்கள் எப்படி சித்தர்கலாக ஆனார்ள் என்று நீங்கள் எப்பொழுதாவது யோசித்து இருக்கிறிர்களா? இந்த பூமியில் பிறக்கும் யாருமே அவதார புருஷர்கள் இல்லை" எபதுதான் நிஜம்.

ஒரு மனிதன் அவன் வாழும் காலத்தில் அவன் எவ்வாறு வாழ்கிறான் என்பதுதான் அவன் பிறப்பின் முக்கியத்துவமாக இந்த உலகம் அறிந்து கொள்கிறது! பிறப்பினால் சிறப்பு இருக்கலாம்... ஆனால் பிறப்பால் சிறப்பு இருக்கவே முடியாது!
நீங்கள் முயன்றால் நீங்களும் ஒரு சித்தராக ஆகலாம் என்பதை உங்கலாள் நம்ப முடிகிறதா?
ஆனால.. முடியும் என்பதுதான் நிஜம்! நான் அவ்வாருதான் நம்பிக்கொன்டிருக்கிறேன். எனக்கு அப்படி ஒரு நம்பிக்கை வந்ததற்கு மிக ஆழ்ந்த காரனங்ஙஙள் உண்டு!
எனக்கு ஏற்ப்பட்ட அந்த சில விசித்திர அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்பட்டு இருக்கலாம்! அல்லது எனக்கே எனக்காக மட்டுமே கிடைத்த அபவமாக கூட அது இருக்கலாம்!
ஏதோ  அமானுஷ்ய கதை சொல்லப் போகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு!

என் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கு முன்பாக ஒரு சந்தேகம் மதில் தோன்றுகிறது...
ஒரு நாள் என் நெறுங்கிய நண்பன் ஒருவன் எனது வீட்டிற்கு வந்து, தான் கண்டெடுத்த புதையலைப்போல் பெருமையோடு ஒரு துண்டு காகிதத்தை என் கையில் கொடுத்தான்! செய்தித்தாள்களில் வரும் வரி விளம்பரம் அது!  அதில் இருந்த வாசகம் இதுதான்  "மலையால மாந்தீரிகம் கற்றுத்தரப்படும்" நான் எனது நண்பனிடம் சொன்னேன்  " நான் இதை நிறைய முறை பார்த்து இருக்கிறேன்" என்று..
அந்த விளம்பரத்தை நீங்களும் பார்த்து இருப்பிர்கள் என நினைக்கிறேன். அந்த விளம்பரத்தைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்?


சரி இப்பொழ்து எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களைப் பார்ப்போம்

சில வருடங்களுக்கு முன்பு.. 1997 - 1998 ல் நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கும் பொழுது சந்தோஷ் என்று ஒரு நண்பன் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தான்.
ஒரு நாள் ந்தோஷ் ஒரு புத்தகத்தை கொண்டுவந்து என்னிடம் கொடுத்து பாலா "இதைப் படிச்சுப் பாருடா" என்று தந்தான். அது மிகப் பழைய புத்தகமாக இருந்தது! அந்த புத்தகத்தில் இருந்த குறிப்புகள் யாவும் மாந்தீரிக செய் முறைகளும் விளக்கங்ளும் மிதமிஞ்சி இருந்தது! மேலும் அந்த புத்தகத்தில் இருந்த மாந்திரீக செய்முறைகளளும் அதன் பலன்களும் நம்பகத் தன்மை அற்றதாகவே இருந்தது!

நிற்க,

என் நண்பன் சந்தோஷ்  கேட்டான் 'இதையெல்லாம் நம்பறி
யா பாலா?'
பின்பு அவனாகவே சொன்னன் "நான் இதுல எதையாவது ஒன்னை செஞ்சு பார்க்கப்போறேன்டா"
எனக்கு அவனுடைய விருப்பம் விசித்திரமாப் பட்டது.
நான் சொன்னேன் "ஆதிவாரம் - இரட்டைவால் அரனை- கருங்கழுதை- முள்ளெலி- ஒளிவீசும் மரம்- கருடன் கூடு.., இதெல்லாம் எங்க கண்டு தேடுவ?"என்று.
இதில் ரொம்பவே விசித்திரம் என்னவென்றால்... அந்த புத்தகத்தில் ஒரு மரத்தைப் பற்றி குறிப்பிட்டு இருந்தது, ஒரு மரத்தில் பழம் பழுத்து அந்த பழத்தின் கொட்டைகள் கீழே விழுந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த கொட்டைகள் எல்லாம் மீண்டும் அந்த மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்' என்று.

இதை படித்தவுடன் எனக்கு சிரிப்புதான் வந்தது... பொய் சொல்லக் கூட ஒரு அளவு இருக்க வேண்டாமா.? என்று தோன்றியது..!
அடுத்து,
ஒரு மூலிகையின் வேர் ஒன்றை எடுத்து தாயத்து செய்து நாம் அனிந்து கொண்டோம் என்றால்...?!
அந்த மூலிகை வேர்க்கு இரும்பை இளக வைக்கும் தன்மை உண்டு!
ஆக, அந்த புத்தகம் முழுக்க இந்த புமியில் இல்லாத பொருட்களை தேடி எடுக்கச் சொல்லி இருந்தார்கள்! அவ்வாறு நீங்கள் கண்டெடுத்திர்கள் என்றால்  தெய்வத்திற்கு நிகரான அஷ்டமா சித்துக்கள் உங்கள் கைவசம் வரப்பெருவீர்கள் (அஷ்டம சித்துக்கள் என்றால் எவை எவை? அவற்றை ஒவ்வொன்றாய் பெருவது எவ்வாறு என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்!)


அந்த புத்தகம் படித்த சில வறுடங்களுக்குப் பிறகு, அந்த புத்தகம் பற்றிய பெரும்பாலன தகவள்களை நான் மறந்தேவிட்டேன்.
இதற்கு இடைப்பட்ட இரண்டொரு வருட காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு துறவியைப் போல் மாரிக்கொண்டிருந்த என் நண்பன் சந்தோஷ் ஒரு நாள் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனான்.
அதன் பிரகு நடந்த சம்பவங்கள்.!

1) ஒரு நாள் என் தந்தை வழி பாட்டி ஊருக்கு நான் சென்றிருந்த போழ்து, அங்கே ஒரு பழைய பாக்யா புத்தகம்...
அதில் இரும்பை இளக வைக்கும் அந்த விசித்திர மூலிகையின் வேர் புகைப்பம். அதைப்பற்றிய ஒரு கட்டுறை!


2) விழுப்புரத்தில் ஒரு பழைய புத்தக கடை அங்கே நான்..! என் கையில் ஒரு பழைய குங்குமம் புத்தகம். அதில் அந்த விசித்திர விருச்சம் பற்றிய கட்டுறை. "மரத்தில் ஒட்டிக் கொள்ளும் கொட்டைகள்" என்ற தலைப்பில்?! கூடவே அந்த மரத்தின் புகைப்படம்! அந்த மரம் இருக்கும் ஊர், அந்த ஊரின் மாவட்டப் பெயர்!

3)குன்றத்தூர் அங்கே ஒரு பழைய இரும்பு மற்றும் பழைய பேப்பர் கடை! அங்கேயும் நான்?! என் கையில், நான் எப்பொழ்தும் தொட்டிறாத இந்திராசௌந்தர்ராஜன் அவர்களுடைய "பாக்கட் நாவல்" அதில் "இரவில் ஒளி வீசும் அபூர்வ விருச்சம்" என்று சில தவல்கள். அந்த மரம் இருக்கும் ஊரின் பொயர், அந்த மரத்தை காலம் காலமாய் பாதுகாத்து வரும் குடும்பத்தின் பெயர்!

4)ஆவடி அருகே பட்டாபிராம் என்ற ஊர் ...................................................

உதாரனங்கள் போதும் என்று நினைக்கிறேன்?!

இப்பொழ்து நீங்கள் சொல்லுங்கள் இதெல்லாம் சாதாரமான சம்பவங்கள் தானா? ஆம் என்பது உங்கள் பதிலாக இருக்குமானால்..
நிச்சயமாக என்னால் "இல்லை" என்று மறுக்க முடியும்?!
ஒரு வேலை இந்த அனுபவங்கள் யாவும் ஏதோ ஒன்றை சொல்கிறது என்றால்...? வாருங்ள் அவை என்னவென்றுப் பார்க்கலாம்! நீங்களும் நானும் கைக்கோர்த்து செயல்பட வேண்டும் என்பதற்காக கூட இன்னும் சில சம்பவங்கள் நம் வாழ்வில் நிகழ்ந்து கொண்டிருககலாம்!

ஒரு வேலை நீங்கள் எதையும் நம்பாமல்... அந்த அபூர்வ சக்திகொண்ட மரங்களை மட்டுமே பார்கக விரும்பினால்... ?!
!
வாருங்கள் ஒரு முறை சென்று பார்த்து வருவோம்!
உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதுங்கள், எதிர் பார்த்து காத்துகிட்டு இருப்பேன்.