ஞாயிறு, 20 டிசம்பர், 2015

நீர் மேலாண்மை...

பாலாவுடைய நெடுநாள் கனவு
இந்த மழை..!

இவ்வளவு கொட்டித் தீர்த்தும்...
எனது தண்ணீர் தாகம் இன்னும் தீரவே இல்லை!

கொஞ்சம் வீட்டுக்கு வெளியே வந்து..

எட்டி...
சாலையை பாருங்கள்...!

எங்கெங்கு காணினும் தண்ணீர்..!

தண்ணீர் ஓர் குழந்தையைப் போல...

சாலையில்,
செல்லும் திசை அறியாமல் திக்குமுக்காடி தவித்துக் கொண்டு நிற்க்கிறது...!

ஊருக்குள் புகுந்துவிட்ட வனவிலங்கைப் போல..

தண்ணீரை கண்டு நம் மக்கள் யாவரும் மெல்ல அஞ்சுகிறார்கள்!

வேண்டாத விருந்தாளி வந்ததைப் போல..

மனிதர்கள் யாவரும் இந்த தண்ணீரை கண்டு
முகச் சுளிப்போடு..
புறம்தள்ளுகிறார்கள்..!

வா..
என்று வறவேற்று மனம் மகிழவோ..
வந்தவற்றை சேமித்து வைத்து பயன்படுத்தவோ...
போதிய அறிவும், தொழில்நுட்பமும் நமக்கில்லை..!

இதே தண்ணீரின் கால் அளவு பங்கிற்க்கு கையேந்தி நின்றோம் அண்டை மாநிலத்திடம்..

இதோ...
இயற்க்கையே நம் குரலுக்கு செவிசாய்த்து மோதும் மோதும் என..

நமக்கான
தண்ணீரை வாரிவழங்கி கொண்டு இருக்கிறது...!

என்ன செய்யப் போகிறோம் நாம்..?
நம் அரசுதான் -நம் நலனுக்கா
என்ன செய்துவிடப் போகிறது...?

இரண்டொரு தினங்களில் இந்த தண்ணீர்...
நம்மையும், நாம் வாழும் சூழலையும் வேடிக்கைப் பார்த்துவிட்டு..

சாலையோர கால்வாய் சாக்கடையுடன் கூட்டனி  வைத்துக் கொண்டு...
நம்மீது சொல்லமுடியாத வெறுப்புடன் -நம்மை
வேடிக்கைப் பார்த்தபடி
சென்று..
கடலோடு கலக்கப் போகிறது...!

தண்ணீரின் அருமையை யார் உணர்வார்களோ இல்லையோ...
உலக மனிதர்களில்
தமிழன் மட்டுமே தண்ணீரின் அருமையை நன்கு உணர்ந்தே இருக்க வேண்டும்..!

ஒவ்வொரு தமிழனும் தண்ணீரின் மேல் தீராத காதலும் மறியாதையும் கொண்டே வாழ்ந்தாக வேண்டும்..!

காரணம் நம் நில அமைப்பு..!

நாம்..
முதலில் நம்மை புரிந்து கொள்ள வேண்டும்..! நம் தேவைகளை நன்கு அறிந்து கொண்டு
நாம் வாழும் சூழலையை புரிந்து கொள்ள வேண்டும்!

அண்ணா சாலையை உழுது..
தங்கம் விதைத்தால்..

தங்கமே விளையும் பூமி - நம் பூமி!

நாடே பாலைவனமாய் கிடக்கும்
அரபு தேசது மக்களுக்கு கூட தண்ணீர் தேவை அதிகமில்லை..!

ஆனால் நமக்கு தண்ணீர்தான் உயிர் மூச்சு..!

இந்த உலகம் முழுவதும் ஐந்து வகை யான நிலப்பரப்பால் ஆனது..!

விசித்திரம்..
அந்த ஐந்து வைகையான நிலப்பரப்பும் - மண் வகைகளும் ஒருங்கே அமைந்த ஒரு தனி நாடு என்றால் அது நம் தமிழகம்தான்!

உலகம் முழ்வதும் நான்கு வகையான பருவ நிலைகள் பொதுவாக காணப் படுகிறது..!

ஒரு நாட்டில் வருடத்தின் பெரும்பாலான நாட்கள் முழுவதும் வெய்யிலில் காய்ந்து கொண்டே இருக்கும்..!

ஒரு நாட்டில் வருடம் முழுவதும் சதா பனிமழையில் நனைந்து கொண்டே இருக்கும்..!

ஒரு நாடு - வருடம் முழ்வதும் குளிர் காற்றில் நடுங்கிக் கொண்டு இருக்கும்..!

நம் இந்திய தேசம், குறிப்பாக நாம் வாழும் தமிழ் தேசம்...

உலகத்தில் உள்ள மொத்த பருவ நிலையையும் ஒருங்கே அமைந்த தேசம்!

வெயில் வேண்டுமா..
அனுவிச்சுக்கோ

குளிர் வேண்டுமா..
அனுபவி..

பனி..

மழை..

என
எல்லாமே...

தேவையான அளவு நாம் அனுபவிக்க..

மூன்று மூன்று மாதங்கள் இயற்கையே நமக்கு தந்திருக்கிறது..!

இங்கே வளராத மரமோ..
பயிரோ..
கனியோ உண்டோ.?

விளைச்சல் குறைவாக இருந்தாலும் எல்லாவித பயிர்களும் விளையும் விசித்திரமான மண் நம் தமிழ் மண்!

ஆகவேதான் நம் முன்னோர்கள் வாழ இந்த நிளப்பரப்பை தேர்ந்தெடுத்தார்கள்!

அமெரிக்காரன் ..
ரஷ்யாகாரன்..
ஆப்பிரிகாகாரன்..
சைனாகாரன்..
ஜப்பான்காரன்

என்று
நமக்குப் பின்னே விவசாயம் கற்றவன் எல்லாம்..

இன்று
தன்னை ஒரு விவசாயி என்று பெருமையோடு சொல்லிக் கொண்டு

தன்னால் இயன்ற அளவு உணவுப் பொருட்களை உற்ப்பத்தி செய்து கொண்டு இருக்கிறான்!

உலக அரங்கில் விவசாய நாடு என்று பெருமையோடு கூறிக் கொண்டு..
செருக்குடன் வாழ்ந்து வந்த நாம்...

இன்று..

பொருப்பற்ற - சுய நல அரசியல் வாதிகளின்
சூழ்ச்சியாலும்
கையாலாகாத தனத்தாலும்.,

"தண்ணீர் பற்றாக்குறை" என்று கூறிக் கொண்டு விவசாயத்தை விட்டு வெளியேறி...

கார்ப்ரேட் நிறுவணத்திற்க்கு
அடிமையாக வாழ
தயாராகவும் - பழகிக் கொண்டும் இருக்கிறோம்..!

திருவள்ளுவர் சும்மாவா சொன்னார்..?

"நீர் இன்றி அமையாது உலகு!" என்று.

விவசாயத்தின் அருமையை உணர்ந்தல்லவா சொல்லி இருக்கிறார்!

"தண்ணீரை சேமிப்போம்" என்பதை விட..

"தண்ணீரை நேசிப்போம்" என்பதுதான் சரி!

ஒரு துளி தண்ணீர்தான் என்றாலும்..
அதை நேசிக்கப் பழகுவோம்...

பிறகு,
அந்த ஒரு துளி தண்ணீரை
சேமிக்கும் பழக்கம்...
தானாகவே நமக்கு வந்துவிடும்!

இன்னும் - பெய்யன பெய்யட்டும் மழை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக