கடந்த இரண்டு பதிவில் கதைக்கு எடுத்தாளப்பட்ட மூன்று வெவ்வேறு சம்பவங்களை பார்த்தோம்! மேலும் அந்த சம்பவங்கள் எப்படி கதைகலாக மாற்றப்பட்டுள்ளன என்று இப்பொழுது கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்! ஒரு சிறந்த திரைக்கதைக்கு அது மையம் கொண்டிருக்கும் கதையும் அதன் கருவும்தான் பலம் என்பதை எப்பொழுதும் மறக்காதிர்கள்!
இந்த ஒரு எளிய சூத்திரத்தை அறியாமல் சிலர் படம் எடுக்க வந்ததன் விளைவுதான் இன்று தமிழ் சினிமாவில் நிறைய குப்பை படங்கலாக வந்து குவிந்து கொண்டு இருக்கிறது?!
நான் சமிபத்தில் (கடைசியாக தியேட்டரில்) பார்த்து ரொம்பவே கடுப்பாகிப் போன படம்...?! இரும்பு குதிரை!
சரி திரைக்கதையைப் பற்றி பார்ப்போம்...
திரைக்கதை என்பது... கதை+சம்பவங்களின் தொகுப்பு! அவ்வளவுதான் வேறொன்றும் இல்லை! என்ன கதை? எந்த மாதிரியான சம்பவங்களின் தொகுப்பு?
அதில்தான் ஒரு வெற்றிகரமான சினிமாவின் சூட்சுமம் மறைந்து இருக்கிறது! ஆதனால் நாம் திரைக்கதையின் மையமான 'கதை' யை அதன் தன்மைகளை நன்றாக அராய்ந்து விடுவோம். பிறகு, திரைக்கதை பற்றி பார்க்கலாம்! மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் சற்று புரியாதது போல் இருந்தால், இந்த எளிமையான உதாரணம் மூலம் புரிந்து கொள்ளுங்கள்!
ஒரு செய்தி.. இதுதான் ஒரு கதையின் கரு!
ஒரு கதைக்கு அதன் கரு மிகவும் முக்கியம்! அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்!
உதாரணத்திற்கு ...
நம் நண்பன் ராஜா, பார்வை அற்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.. என்றால் ? இது ஒரு செய்தி! இந்த செய்தியில் கதைக்கு தேவையான கரு ஒன்று மறைந்துஇருக்கிறது இல்லையா?
யார் அந்த பெண்? திருமணத்திற்கு முன்பும் பின்பும் ராஜாவின் நிலை என்ன என்று சொன்னால் அது கதை!
இன்னும் விரிவாக, அந்த பெண்ணை ராஜா எங்கே என்ன சூழ்நிலையில் சந்தித்தான் என்றும் அவர்களுடைய திருமணம் எங்கே நடந்தது.. உடன் யாரெல்லாம் இருந்தார்கள் என்பது போல், ராஜாவின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை தொகுத்து சொல்வதுதான் திரைக்கதை!
இப்பொழுது ஓரளவிற்கு புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்!
சரி, இப்பொழுது நாம் கதையை பற்றி மட்டும் பார்ப்போம், திரைக்கதையை பற்றி பிறகு விரிவாக பார்க்கலாம்!
முதல் கதை....
ஒ.ஹென்றி யின் கதையும் அதன் சம்பவம் இதுதான்,
இரண்டு நண்பர்கள் பிரிந்து செல்கிறார்கள்.. 20 வருடங்களுக்குப் பிறகு, தங்கள் ஒப்பந்த படி, பிரிந்த இடத்திலேயே மீண்டும் சந்திக்கிரார்கள்.!
இதுதான் அந்த கதையில் சொல்லப் பட்டுள்ள சம்பவம்!
இந்த சம்பவத்தை உலக சிறுகதை மன்னன் ஒ.ஹென்றி தன் கதையில் எவ்வாறு பயன்படுத்தி ஒரு தேர்ந்த சிறுகதையை படைத்துள்ளார் என்று இப்பொழுது பார்ப்போம்!
மீண்டும் முதலில் இருந்து...
இரண்டு நண்பர்கள் பேசிக் கொள்கிறார்கள், முடிவில் ஒரு ஒப்பந்தத்துடன் ஒரு நண்பன் மட்டும் பிழைப்பு தேடி தொலைதூர ஊருக்கு பிரிந்து செல்கிறான்!
அவர்கள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் இதுதான்,
20 வருடங்களுக்குப் பிறகு யார் எந்த நிலையில் இருந்தாலும் இதே மாதத்தில் இதே தேதியில் இந்த நேரத்தில் இதே இடத்திற்கு வந்து, முதலில் வருபவர் மற்றவர்க்காக காத்திருக்க வேண்டும்!.
20 வருடங்களுக்குப் பிறகு,
ஒப்பந்த படி, வெளியூர் சென்றிருந்த நண்பன் முதலில் வந்து விடுகிறான். தங்கள் ஒப்பந்த படி தன்னை தேடி நண்பன் வருவான் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறான். சிறிது தாமதமாக அவனுடைய நன்பனும் வந்துவிடுகிறான். ஒருவரை ஒருவர் ஆனந்தத்துடன் கட்டி தழுவிக் கொள்கிறார்கள்.
கவனிக்கவும் இதுதான் அந்த கதையில் உள்ள சம்பவம்.?! இதுதான் நிகழ்வு என்றால்...
இதை அப்படியே சொல்வதில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவு அல்லவா..?
இதை ஓ.ஹென்றி எவ்வாறு மிக சுவாரஸ்யமாய் மாற்றி சொல்லி இருக்கிறார் என்று இப்பொழுது பார்ப்போம்!
மீண்டும் முதலில் இருந்து!
அதற்கு முன்பு பெரும்பாலான கதைகளில் பயன்படுத்தப் படும் ஒரு சூத்திரத்தை தெரிந்து கொள்ளுங்கள்,
ஒரு சம்பவம் (கதை) + சிறிது கற்பனை!!
கதை எழுதும் போது இந்த சூத்திரத்தை பயன்படுத்தி நீங்கள் கதை எழுதினிர்கள் என்றால் ஒரு சாதாரனமான சம்பவத்தைக் கூட மிக அருமையான கதையாக மாற்றிவிடலாம்!
எப்படி?
விரிவாகப் பார்க்கும் முன்...
இப்பொழுது ஒ.ஹென்றின் கதையைப் பார்த்து விடலாம்...
இருபது வருடங்களுக்குப் பிரகு, இரண்டு நண்பர்களும் சந்தித்துக் கொள்கிறார்கள். மிகுந்த மகிழ்ச்சியோடு இருவரும் கட்டித் தழுவிக்கொள்கிறார்கள். பிறகு இருவரும் கை கோர்த்துக் கொண்டு பேசியபடி இருளான சாலையில் நடந்து செல்கிறார்கள். ஓர் இடத்தில் தெரு விளக்கின் வெளிச்சத்திற்கு வருகிறார்கள், ஒருவரை ஒருவர் ஆவலுடன் முகம்பார்த்துக் கொள்கிறார்கள்.
வெளியூரில் இருந்து வந்த நண்பனினன் முகம் சட்டென்று மாறுகிறது..
அவன், அதிர்ச்சி அடைந்து போய் கேட்கிறான், "ஏ..ய்... யார் நீ? என் நண்பனின் முக சாயல்ல இல்லையே நீ.."
அவனிடம் இருந்து தன்னுடைய கையை விடுவித்துக் கொள்ள முயற்ச்சிக்கிறான், அப்பெழுதுதான் தெரிகிறது தன் கையில் விலங்கு மாட்டி இருக்கிறது என்று?!
வந்தவன் சொல்கிறான், "உண்மைதான். நான் உன்னுடைய நண்பன் இல்லை! என்னைப் பற்றி நீ தெரிந்து கொள்வதற்கு முன்பு, இந்த கடிதத்தைப் படி!"
அவன் கொடுத்த கடிதத்தை வாங்கிப் படிக்கிறான்.
சாரி... நண்பா. நம் ஒப்பந்தப்படி நானும்
உன்னை காண ஆவலோடு வந்தேன். நீ சிகரெட்
பற்ற வைக்கும் போதுதான் தெரிந்தது, நீ
பக்கத்து மாநில காவல் துறையால் தேடப்படும்
ஒரு முக்கிய குற்றவாளி என்று?!
காலம் என்னை ஒரு காவல் துறை அதிகாரியாக
ஆக்கி இருந்தாலும்..
நான் உனது நண்பனாக இருப்பதால்
என்னால் உன்னை கைது செய்ய முடியவில்லை.
இந்த இருபது வருடம் நம் தோற்றத்தையும்
நம் வாழ்க்கை முறையையும்
ரொம்பவே மாற்றி இருக்கிறது. நீ திருந்தி வரும் நாட்களுக்காக....
அவ்வளவுதான் இந்த கதை!
இப்பொழுது சொல்லுங்கள்.. முன்பு பார்த்த சம்பவத்தை விடவும் இப்பொழுது கதையில் சுவாரஸ்யம் கூடி இருக்கிறது அல்லவா?!
இந்த கதையில் எதார்த்த நிகழ்வின் பங்கு என்ன? கற்பனையின் பங்கு என்ன என்று உங்கள் அறிவு பலத்திற்கு ஏற்றாற்ப் போல் நீங்களே அலசி பாருங்கள். இந்த கதை எங்கிருந்து வளர்ந்து இருக்கும் என உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும்!
சரி, இப்பொழுது அடுத்த கதையைப் பார்ப்போம்!
கிராமத்தில் ஆதரவு அற்ற வயதான தம்பதியர். ஆடு மேய்ப்பது தொழில். ஒரு நாள் வழக்கம் போல் ஆடு மேய்த்துக கொண்டு இருக்கும் பொழுது, இரண்டு வெள்ளை காரர்கள் வந்து அந்த ஆடு மேய்க்கும் கிழவரிடம் ஏதோ விசாரிக்கிறார்கள்.
முதியவர்க்கு புரியவில்லை. அவர் பயந்த படி ஏதோ சொல்கிறார் அது அந்த வெள்ளை காரர்களுக்கு புரியவில்லை! பேச்சின் முடிவில், வெள்ளைகாரர்கள் முதியவர்க்கு நிறைய பணம் தருகிரார்கள்! பணத்தோடு முதியவர் வீட்டுக்குப் போகிறார்.
இதுதான் இரண்டாவதாக சொல்லப் பட்ட கதையின் சம்பவம். உண்மை தானே?
இப்பொழுது, இந்த சம்பவத்தை வைத்து ஆர்.கே நாராயணன் அவர்கள் எவ்வாறு ஒரு புகழ் பெற்ற நகைச்சுவை கதையாக மாற்றி இருக்கிறார் என்று இப்பொழுது பார்ப்போம்.!
மீண்டும் முதலில் இருந்து... வேண்டாம் என நினைக்கிறேன், அதனால் கதையின் முக்கியமான நிகழ்வை மட்டும் பார்ப்போம்.
(தோராயணமாக அவர்களுடை உறையாடல் கதையில் இவ்வாறு )
வெள்ளையர்கள்..ஆங்கிலத்தில் பேசுகிறார்கள், "Good Morning Old man"
முதியவர் தன் தாய் மொழியில் பேசுகிறார், "ஐயா, எனக்கு எதுவும் தெரியாதுங்க!
வெள்ளையர்கள்.. (ஆங்கிலத்தில்) "எப்படி இருக்கிங்க? நலமா?"
முதியவர், "ப்பைனா? என்னால அபராதம் எல்லாம் கட்ட முடியாதுங்க. நா ரொம்ப ஏழைங்க."
வெள்ளையர்கள், "இந்த சிலை (ஐயனார்சிலை) உங்களுடையதா? ரொம்ப அழகா இருக்கு!"
முதியவர், "தெரியாம இங்க வந்துடேங்க. நாளையில இருந்து இந்த பக்கமே வரமாடேங்க "
வெள்ளையர்கள், "நாங்க பேசுவது உங்களுக்குப் புரிதா?"
முதியவர், இதோ இப்பவே நா ஆடுகள ஓட்டிகிட்டு கிலம்புறேங்க!
வெள்ளையர்கள், உங்கள் சிலையை எங்களுக்கு விலைக்குத் தருவீர்களா?"
முதியவர், பணமா? ஓ... நீங்கள் ஆடு வாங்க வந்திங்களா? நா என்னமோனு பயந்துடேன்."
வெள்ளையர்கள், ஆமாம். பணம் தருகிறோம், எவ்வளவுனு விலையை சொல்!"
முதியவர், "எல்லா ஆட்டையும் வாங்கிகிட்டாலும் எனக்கு சந்தோஷம் தான். இந்த சத்தியுள்ள ஐயனார் சாமிதான் உங்களை என்கிட்ட கூட்டிடு வந்து இருக்கார்"
வெள்ளையர்கள் "எங்களுக்கு இந்த குதிரையும் அந்த மீச வச்ச வீரன் சிலை மட்டும் போதும்."பதினைந்தாயிரம் தருகிறோம்.
முதியவர், "இவ்வள பணத்தை என் பொண்டாட்டி பார்த்தா ரொம்ப சந்தோஷ படுவா.
வெள்ளையர்கள், "நாங்கள் போய் கூலி ஆட்களை கூட்டிவந்து, இன்றே சிலையை எடுத்துடு போகலாம் இல்லையா?
முதியவர், "முதல்ல நான் போய்டுரேன். நா இருந்தா ஆடுங்க எதுவும் வண்டில ஏராதுங்க!
முதியவர் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தான் திறமையாய் ஆடு வித்த கதையை சொல்லி, பணத்தை என்னிப் பார்த்து சந்தோஷ பட்டுக் கொண்டு இருக்கும் பொழுது, மேய்ச்சல் நேரம் முடிந்து
மொத்த ஆட்டுக் கூட்டமும் வீடு வந்து சேர்கிறது!
முதியவர் ஒன்றும் புரியாமல் பணத்தையும் ஆடுகளையு மாரி மாரி பார்த்படி உட்கார்ந்து இருப்பதாய் கதை முடியும்!
சரி இப்பொழுது மூன்றாவது கதையை பார்ப்போம்.
டெலிபோன் பூத்தில் வேலை செய்யும் ஒரு பெண். அவளுக்கு, அங்கே போன் செய்ய வரும் ஒரு இளைஞன் மீது அதிகப்படியான ஈர்ப்பு ஏற்படுகிறது.
ஒரு நாள் முழுவதும் அவனைப் பற்றிய நினைவுகளில் சிக்கி தவிக்கிறாள். அங்கே போன் பேச வரும் பல்வேறு குணம் கொண்ட மனிதர்களுடன் அவனை ஒப்பிட்டு பார்த்துக் கொண்டு, அவன் வழக்கமாய் வரும் நேரத்தை எதிர் பார்து காத்துக் கிடக்கிறாள்.
பூத் மூடும் நேரத்தில் கடைசி மனிதனாக அவன் வருகிறான்.
வழக்கமாய் பேசும் நண்பனுக்கு போன் செய்து,
'தன்னுடைய வேலை வெளியூர்க்கு மாற்றப் பட்டுள்ளது என்றும், இன்று இரவே இந்த ஊரில் இருந்து புரப்பட்டாக வேண்டும், என்றும் பேசுகிறான்.
அந்தப் பெண் எல்லாவற்றையும் கேட்டபடி, செய்வதறியால் தவிப்போடு உட்கார்ந்து இருக்கிறாள்.
அந்த இளைஞன், போன் பேசி முடித்துவிட்டு, போன் 'பில்' லுக்கு காசை கொடுத்துவிட்டு அவளிடம் "வரேன்" என ஒற்றை வார்த்தையில் சொல்லிக் கொண்டு பில் பேப்பரை கூட வாங்க மறந்தவனாய் அவசரமாக கிலம்பிப் போகிறான்.
இதோடு இந்த கதை முடிகிறது!
நாம் பார்த்த இந்த மூன்று கதைகளிலும் ஒரு எதார்த்த சம்பவமும் கொஞ்சம் கற்பனை யும் கலந்து இருக்கிறது என்பதை உங்களால் அறிய முடிகிறதா?
இதுதான் ஒரு கதையின் சூத்திரம்.
இந்த சூத்திரப்படி எழுதப்படும் கதைகள் மக்கள் மனதில் காலம் கடந்து நிற்கும்!
அவ்வாறு இன்றி முழுக்க கற்பணையில்..
Hero ஊர்ல இருக்கிற பிச்சை காரன்களை எல்லாம் கடத்துரான் ..
என்று ஆரம்பித்தால்..
அந்த கதை உயிரோட்டம் இன்றி பார்ப்போர் அல்லது படிப்போர்க்கு எந்த வித அனுபவ பிடிப்பும் ஏற்படாமல், குப்பை படைப்பாகத்தான் இருக்கும்!
உலகப் புகழ் பெற்ற கற்பனை கதைகளா கருதப்படும்..
'ஜங்குல் புக்' 'டார்ஸான்' 'ஸ்பைடர் மான்' போன்ற இன்ன பிற கதைகள் யாவும் , எதார்த்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கற்பனை கதைகள்!
அதாவது, எதார்த்தம் கொஞ்சம் + நிறைய கற்பனை!
உங்களால் முடிந்தால்...
டார்ஸன் கதையில் மறைத்துது வைக்கப் பட்டுள்ள உண்மை சம்பவத்தை கண்டு பிடியுங்கள்!
உங்கள் திறமைக்கு இது ஒரு சவால் என எடுத்துக் கொள்ளுங்கள்..
மீண்டும் அடுத்த பதிவில் பார்ககலாம்!