திங்கள், 6 அக்டோபர், 2014
திரைக்கதை எழுதுவது எப்படி?
நேற்றைய இரவு என் நண்பன் ஏழைப்பங்காளன் (மிரள வேண்டாம், இதுதான் அவனுடைய உண்மையான பெயர்) புல் போதையில் வந்து என் தூக்கம் கெடும்படி ஒரு மொக்க உரையாடலை நிகழ்த்தி விட்டு போனான்! பெரும்பாலன குடி ராஜாகளுக்கு போதையில் இருக்கும் போதுதான் பாசம் பொங்கும்! பல முறை... பல நாட்கள் சொல்லி இறுக்கிறேன் "குடிச்சுட்டு நைட் டைம் ல என்னை தேடி வீட்டுக்கு வராதேடா"
சரி விட்டுவிவோம்! அவன் என்னைப் பார்க்க வந்த காரணம் இதுதான்...
'பாலா எனக்கு புதுசா ஒரு கதை தோனுச்சு.. அதை உங்கிட்ட சொல்லலாம்னு தான் வந்தேன். எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை, சரி இவனுக்கு னு ஒரு பத்து நிமிடம் ஒதுக்கியாச்சு, அந்த பத்து நிமிசம் இவன் என்ன பேசனுமோ பேசட்டும்,, என்று நினைத்து சோல்லுடா என்ன கதை? என்றேன்.
அவன் சொன்ன கதையின் ஆரம்பம் இதுதான்,
நம்ம நாட்டுல பிச்சகாரங்க அதிகமாய்ட்டாங்கல.. அவங்கல வச்சி என்னடா பன்னலாம்?
அவன் கேட்ட கேல்வி ல நான் ரொம்பவே கடுப்பாகிப்போனேன்.. இருந்தாலும் வெளியே காட்டிக்காம சொன்னேன், அவங்கள வச்சி என்ன பன்றது பிச்சதான் எடுக்லாம்.
உடனே அவன் குறுக்கிட்டு, "அதான் இல்ல. இந்த கதைல என் ஹீரோ ஊர்ல இருக்கிற எல்லா பிச்சகாரங்களையும் கடத்துரான்"
எனக்கு கிர்னு தலைசுற்ற ஆரம்பித்தது! இப்பொழ்து உங்களுக்கு எப்படி இருக்கிறது..?!
அவன் ஏதோ விளையாட்டுக்கு சொல்கிறானோ என்று ஆரம்பத்தில் தவராகக்கூட நினைத்தேன், ஆனால் அதற்கு அடுத்த பத்து நிமிடங்களில் என் காதில் இரத்தம் வராததுதான் மிச்சம்!
சில வறுடங்களுக்கு முன்பு (2005)
இயக்குனர் பாலா அவர்களிடம் உதவிஇயக்குனராக சேரவேண்டும் என்ற கனவோடு சென்னையில் சுற்றி திறிந்து கொண்டிருந்த காலம்! அப்பொழ்து நிறைய புத்தகங்கள் படிக்கிற வாய்ப்பும் நேரமும் நிறையவே கிடைத்தது! உள்ளூர் இலக்கியம் முதல் உலக இலக்கியம் வரை படிக்கப் படிக்க கதை என்பது என்ன? எவ்வாறு ஒரு சிறந்த கதையை தேர்ந்தெடுப்பது? (கவனிக்கவும், ஒரு இயக்குனரோ, கதாசிரியரோ யாருமே ஒரு சிறந்த கதையை உருவாக்குவதே இல்லை! இதுதான் நிஜம்! அவர்களுடைய வேலை ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுப்பது மட்டுமே!)
கதை ஓக்கே! அது என்ன நல்ல கதை? அது வேற ஒன்றும் இல்லை கேட்கவும்- பார்க்கவும் - எழுத்து மூலம்சொல்லப்பட்ட கதையென்றால் படிக்கவும் ரெம்பவே சுவாரஸ்யமாய் இருக்க வேண்டும்! இதுதான் முதல் விதி! இதை நான் சொல்லவில்லை நான் படித்த ஒரு சில புத்தகங்கள் அப்படித்தான் சொல்லி கொடுத்தன!
ஒரு நல்ல கதை எப்படி அடையாலம் கான்பது? அந்த அனுபத்தை பெறத்தான் நீங்கள் நிறைய படிக்க வேண்டும்! நிறைய படித்துப் படித்து நிறைய கற்க வேண்டும்! யார் யார் என்னெனன் கதைகளை எப்படியெல்லாம் சொல்லி இருக்கிறார்கள் என்ற ஆழ்ந்த புரிதல் ஏற்பட வேண்டும்! பிறகு உங்கள் வாழ்க்கையில், உங்கள் அனுபத்தில் இருந்தே ஏதேனும் ஒரு சம்பவத்தை எடுத்து தூசு தட்டி (அதாவது உங்கள் நினைவுக்கு கொண்டுவந்து) அந்த அனுபவத்தை கதையாக்குவது ஒன்றுதான் கதை எழுத மிகச்சிறந்த வழி, மிகச் சுலமான வழியும் இதுதான்! ஒரு வேலை உங்கள் வாழ்க்கையில் சுவாரஸ்யமான சம்பவங்களோ நிகழாதது போல் உங்களுக்கு தோன்றினால், அது நிஜமில்லை! உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் மூட்டை மூட்டையாய் அவர்களுக்கே மட்டும் கிடைத்த அனுபவங்கள் உண்டு! அந்த அனுபவங்களை வைத்து அவர்களால் கதை பண்ண முடிய வில்லை என்பதுதான் உண்மை! ஒரு வேலை உங்கள் அனுபவத்தை வைத்து கதை பன்ன உங்களுக்கு விருப்பம் இல்லாமல் போகலாம்! இது போன்ற சூழலில் உங்க ஊரில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களையோ, அல்லது இன்னும் நெறுக்கமாய் நீங்கள் பார்த்த, பழகிய மனிதர்களின் வாழ்வில் இருந்து கதைக்கான சம்பவங்களை தேர்ந்தெடுத்து பிறகு கதையாக்குவது ரொம்பவும் நல்லது. இது போன்று உருவாக்கப்படும் கதைகளில் மட்டும்தான் அந்த மக்களின் பண்பாடும் கலாச்சாரமும் முழ்மையாக வெளிப்படும்! ஒரு நல்ல கதையும், நல்ல சினிமாவும் இதன் அடிப்படையில்தான் அளவிடப்படுகிறது!
உதாரணத்திற்கு....
சென்ற வறுடம் வெளவந்த, 'மதயானைக் கூட்டம்' ஒரு நல்ல திரைப்படம்!
மேலும் ஒரு சம்பவத்தை எப்படி சிறுகதை ஆககுவது என்று கற்றுக்கொள்ள, நிறைய சிறுகதைகளை தேடிபிடித்து படியுங்கள். தமிழில் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களுடைய துணையெழுத்து மற்றும் கதாவிலாசம்" என்ற இரண்டு புத்தகங்களே போதும், ஒரு சம்பவத்தை எப்படி கதையாக்குவது என்று கற்றுத்தர?!
சரி.. நான் கற்றுக் கொண்ட ஒரு எளிமையா சூத்திரத்தை இப்பொழுது உங்களுக்கு கற்றுத்தருகிறேன்..
நிச்சயம் இது ஊங்களுக்கு உதவும்! ஏவ்வாறு எனில் அனைத்து விதமான கதைகளுக்குள்ளும் ஒளிந்திருக்கும் அடிப்படை விஷயமே இதுதான்! அதனால் கொஞ்சம் கவனமாக படிக்கவும். எனக்கு தெரிந்த வரையில் இவ்வளவு எளிமையாய் யாருமே விளக்கி சொன்னதே இல்லை!
மூன்று சம்பவங்களைத் தருகிறேன் கவனமாக படியுங்கள்!
1) இரண்டு நண்பரகள் பேசிக்கொள்கிறார்கள், "வாழ்க்கையில் முன்னேறி பணம் காசுனு சந்தோஷமா நாம வாழனும்னா இந்த ஊரை விட்டு வெளியேறி, தலைநகரம் போய் ஏதாவது தொழில் செய்தால்தான் நடக்கும்!
அந்த யோசனையை மற்றொறு நண்பன் ஏற்றுக்கொள்ளவில்லை!
ஒரு நிபந்தனையுடன் ஒருவன் மட்டுமே தலைநகரத்திற்கு பிழைப்பு தேடிப்போகிறான்!?
அவர்கள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட நிபந்னை இதுதான், "இருபது வறுடம் கழித்து யார் எந்த நிலையில் இருந்தாலும், இதே நாள்ல இதே இடத்துக்கு இதே நேரத்திற்கு வந்து மற்றவர்க்காக காத்திருக்கனும்!
இன்றோடு இருபது வறுடங்கள் ஓடிவிட்டது, இன்றுதான் இருபது வறுடங்களுப்பிறகு சந்திக்கும் நாள்! தலைநகரம் பிழைப்பு தேடி சென்ற நண்பன் சரியான நேரத்திற்கு வந்து தன்னுடைய இளமை கால நண்பனை காண அந்த இருளில் காத்திருக்கிறான்! நேரம் போய்ககொண்டு இருக்கிறது. நண்பன் இன்னும் வரவில்லை! இரவு நேரம் என்பதால் சாலையில் மனித நடமாட்டமே இல்லை! ஒரு போலிஸ்காரர் மட்டும் ரோந்து போய்க்கொண்டு இருக்கிறார்! மெதுவாய் தூரல் போட்டுக்கொண்டு இருக்கிறது!
ரோந்து போன போலிஸ்காரர் திரும்பி வருகிறார். இவன் வெகுநேரம் இருளில் தனியே நிற்பதைக் கண்டு, அவனிடம் விசாரிக்கிறார். அவன் ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் சொல்கிறான்! அவன் சிகரெட் பற்ற வைக்கும் போது போலிஸ்காரர் அவனுடைய முகத்தைப் பார்க்கிறார். அவன் கையில் வைர கற்கள் பதித்த கோல்ட் வாட்ச்! அவனுடைய பணக்கார தோற்றம் கண்டு, "உங்கள் நண்பரை சந்திக்க வாழ்த்துக்கள் " என கூறி கை குலுக்கிவிட்டு போலிஸ்காரர் கிளம்பிப் போகிறார. அதன் பிறகு சிறிது நேர காத்திருப்பில் ரெய்ன் கோட் பேட்டபடி அவனது நண்பன் வந்து பெயர் சொல்லி அழைக்கிறான். உற்சாகத்துடன் இருவறும் கட்டி அனைத்துக் கொள்கிறார்கள்!
இது ஒரு சம்பவம்!
இந்த சம்பவத்தை வைத்து 'உலக சிறுகதை மன்னன்" ஓ.ஹென்றி அருமையான கதை ஒன்றை எழுதி இருப்பார்.! அந்த கதையை நீங்கள் படித்து இருக்கிறிர்களா? இந்த சம்பவம் கதையாக மாரும்போது என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறது என்பது பற்றியும், மேலும் இரண்டு கதைகளைப்பற்றியும் அடுத்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்!
உங்கள் கருத்துக்களை மறக்காம எனக்கு எழுதுங்கள், நான் தொடர்ந்து எழுத உதவியாய் இருக்கும்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக