சனி, 4 அக்டோபர், 2014

மாந்திரீகம் கற்கலாம் வாங்க...

Once opon in a Time...
முன்பு ஒரு காலத்தில் நம் இந்திய தேசத்தில் சர்வ வல்லமை படைத்த சித்தர்கள் பலர் வாழ்ந்தார்கள் என்பதை நாம் சில பல புத்தகங்களின் வாயிலாக படித்து அறிந்து இருக்கிறோம். அவர்கள் எப்படி சித்தர்கலாக ஆனார்ள் என்று நீங்கள் எப்பொழுதாவது யோசித்து இருக்கிறிர்களா? இந்த பூமியில் பிறக்கும் யாருமே அவதார புருஷர்கள் இல்லை" எபதுதான் நிஜம்.

ஒரு மனிதன் அவன் வாழும் காலத்தில் அவன் எவ்வாறு வாழ்கிறான் என்பதுதான் அவன் பிறப்பின் முக்கியத்துவமாக இந்த உலகம் அறிந்து கொள்கிறது! பிறப்பினால் சிறப்பு இருக்கலாம்... ஆனால் பிறப்பால் சிறப்பு இருக்கவே முடியாது!
நீங்கள் முயன்றால் நீங்களும் ஒரு சித்தராக ஆகலாம் என்பதை உங்கலாள் நம்ப முடிகிறதா?
ஆனால.. முடியும் என்பதுதான் நிஜம்! நான் அவ்வாருதான் நம்பிக்கொன்டிருக்கிறேன். எனக்கு அப்படி ஒரு நம்பிக்கை வந்ததற்கு மிக ஆழ்ந்த காரனங்ஙஙள் உண்டு!
எனக்கு ஏற்ப்பட்ட அந்த சில விசித்திர அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்பட்டு இருக்கலாம்! அல்லது எனக்கே எனக்காக மட்டுமே கிடைத்த அபவமாக கூட அது இருக்கலாம்!
ஏதோ  அமானுஷ்ய கதை சொல்லப் போகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு!

என் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கு முன்பாக ஒரு சந்தேகம் மதில் தோன்றுகிறது...
ஒரு நாள் என் நெறுங்கிய நண்பன் ஒருவன் எனது வீட்டிற்கு வந்து, தான் கண்டெடுத்த புதையலைப்போல் பெருமையோடு ஒரு துண்டு காகிதத்தை என் கையில் கொடுத்தான்! செய்தித்தாள்களில் வரும் வரி விளம்பரம் அது!  அதில் இருந்த வாசகம் இதுதான்  "மலையால மாந்தீரிகம் கற்றுத்தரப்படும்" நான் எனது நண்பனிடம் சொன்னேன்  " நான் இதை நிறைய முறை பார்த்து இருக்கிறேன்" என்று..
அந்த விளம்பரத்தை நீங்களும் பார்த்து இருப்பிர்கள் என நினைக்கிறேன். அந்த விளம்பரத்தைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்?


சரி இப்பொழ்து எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களைப் பார்ப்போம்

சில வருடங்களுக்கு முன்பு.. 1997 - 1998 ல் நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கும் பொழுது சந்தோஷ் என்று ஒரு நண்பன் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தான்.
ஒரு நாள் ந்தோஷ் ஒரு புத்தகத்தை கொண்டுவந்து என்னிடம் கொடுத்து பாலா "இதைப் படிச்சுப் பாருடா" என்று தந்தான். அது மிகப் பழைய புத்தகமாக இருந்தது! அந்த புத்தகத்தில் இருந்த குறிப்புகள் யாவும் மாந்தீரிக செய் முறைகளும் விளக்கங்ளும் மிதமிஞ்சி இருந்தது! மேலும் அந்த புத்தகத்தில் இருந்த மாந்திரீக செய்முறைகளளும் அதன் பலன்களும் நம்பகத் தன்மை அற்றதாகவே இருந்தது!

நிற்க,

என் நண்பன் சந்தோஷ்  கேட்டான் 'இதையெல்லாம் நம்பறி
யா பாலா?'
பின்பு அவனாகவே சொன்னன் "நான் இதுல எதையாவது ஒன்னை செஞ்சு பார்க்கப்போறேன்டா"
எனக்கு அவனுடைய விருப்பம் விசித்திரமாப் பட்டது.
நான் சொன்னேன் "ஆதிவாரம் - இரட்டைவால் அரனை- கருங்கழுதை- முள்ளெலி- ஒளிவீசும் மரம்- கருடன் கூடு.., இதெல்லாம் எங்க கண்டு தேடுவ?"என்று.
இதில் ரொம்பவே விசித்திரம் என்னவென்றால்... அந்த புத்தகத்தில் ஒரு மரத்தைப் பற்றி குறிப்பிட்டு இருந்தது, ஒரு மரத்தில் பழம் பழுத்து அந்த பழத்தின் கொட்டைகள் கீழே விழுந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த கொட்டைகள் எல்லாம் மீண்டும் அந்த மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்' என்று.

இதை படித்தவுடன் எனக்கு சிரிப்புதான் வந்தது... பொய் சொல்லக் கூட ஒரு அளவு இருக்க வேண்டாமா.? என்று தோன்றியது..!
அடுத்து,
ஒரு மூலிகையின் வேர் ஒன்றை எடுத்து தாயத்து செய்து நாம் அனிந்து கொண்டோம் என்றால்...?!
அந்த மூலிகை வேர்க்கு இரும்பை இளக வைக்கும் தன்மை உண்டு!
ஆக, அந்த புத்தகம் முழுக்க இந்த புமியில் இல்லாத பொருட்களை தேடி எடுக்கச் சொல்லி இருந்தார்கள்! அவ்வாறு நீங்கள் கண்டெடுத்திர்கள் என்றால்  தெய்வத்திற்கு நிகரான அஷ்டமா சித்துக்கள் உங்கள் கைவசம் வரப்பெருவீர்கள் (அஷ்டம சித்துக்கள் என்றால் எவை எவை? அவற்றை ஒவ்வொன்றாய் பெருவது எவ்வாறு என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்!)


அந்த புத்தகம் படித்த சில வறுடங்களுக்குப் பிறகு, அந்த புத்தகம் பற்றிய பெரும்பாலன தகவள்களை நான் மறந்தேவிட்டேன்.
இதற்கு இடைப்பட்ட இரண்டொரு வருட காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு துறவியைப் போல் மாரிக்கொண்டிருந்த என் நண்பன் சந்தோஷ் ஒரு நாள் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனான்.
அதன் பிரகு நடந்த சம்பவங்கள்.!

1) ஒரு நாள் என் தந்தை வழி பாட்டி ஊருக்கு நான் சென்றிருந்த போழ்து, அங்கே ஒரு பழைய பாக்யா புத்தகம்...
அதில் இரும்பை இளக வைக்கும் அந்த விசித்திர மூலிகையின் வேர் புகைப்பம். அதைப்பற்றிய ஒரு கட்டுறை!


2) விழுப்புரத்தில் ஒரு பழைய புத்தக கடை அங்கே நான்..! என் கையில் ஒரு பழைய குங்குமம் புத்தகம். அதில் அந்த விசித்திர விருச்சம் பற்றிய கட்டுறை. "மரத்தில் ஒட்டிக் கொள்ளும் கொட்டைகள்" என்ற தலைப்பில்?! கூடவே அந்த மரத்தின் புகைப்படம்! அந்த மரம் இருக்கும் ஊர், அந்த ஊரின் மாவட்டப் பெயர்!

3)குன்றத்தூர் அங்கே ஒரு பழைய இரும்பு மற்றும் பழைய பேப்பர் கடை! அங்கேயும் நான்?! என் கையில், நான் எப்பொழ்தும் தொட்டிறாத இந்திராசௌந்தர்ராஜன் அவர்களுடைய "பாக்கட் நாவல்" அதில் "இரவில் ஒளி வீசும் அபூர்வ விருச்சம்" என்று சில தவல்கள். அந்த மரம் இருக்கும் ஊரின் பொயர், அந்த மரத்தை காலம் காலமாய் பாதுகாத்து வரும் குடும்பத்தின் பெயர்!

4)ஆவடி அருகே பட்டாபிராம் என்ற ஊர் ...................................................

உதாரனங்கள் போதும் என்று நினைக்கிறேன்?!

இப்பொழ்து நீங்கள் சொல்லுங்கள் இதெல்லாம் சாதாரமான சம்பவங்கள் தானா? ஆம் என்பது உங்கள் பதிலாக இருக்குமானால்..
நிச்சயமாக என்னால் "இல்லை" என்று மறுக்க முடியும்?!
ஒரு வேலை இந்த அனுபவங்கள் யாவும் ஏதோ ஒன்றை சொல்கிறது என்றால்...? வாருங்ள் அவை என்னவென்றுப் பார்க்கலாம்! நீங்களும் நானும் கைக்கோர்த்து செயல்பட வேண்டும் என்பதற்காக கூட இன்னும் சில சம்பவங்கள் நம் வாழ்வில் நிகழ்ந்து கொண்டிருககலாம்!

ஒரு வேலை நீங்கள் எதையும் நம்பாமல்... அந்த அபூர்வ சக்திகொண்ட மரங்களை மட்டுமே பார்கக விரும்பினால்... ?!
!
வாருங்கள் ஒரு முறை சென்று பார்த்து வருவோம்!
உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதுங்கள், எதிர் பார்த்து காத்துகிட்டு இருப்பேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக